Tuesday, June 1, 2010

ஓர் இரவு......... உங்களுடன்.....

அந்த பக்கம் பார்க்காதே...

மனசு சொல்லியது....


இருந்தாலும் கண்கள் திரும்புவதற்கே பார்த்தது.... அதை பார்க்க..

ரயில் சத்தம் தூரத்தில் கேட்டது... ரயில் நிலையதிருக்கு இன்னும் ஒரு கிலோமீட்டர் இருக்கும் என நினைத்தேன்...

இருக்கிற டென்ஷன் வியர்வை கூட வரவில்லை.. என்ன வினோதம்?

ரயில் வந்தாலும் ரயிலில் ஏறப்போகிறேனா ? கேள்வி கேட்டுக்கொண்டேன்..

எங்க போகிறோம் என தெரியாமல் போகப்போகிறோம எனவும் தெரியாமல் ஒன்பது முப்பதுக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடிக்கும் பயணியை போல வேகமாக நடந்தேன்... தயவு செஞ்சு என்னோட நடந்து வர்ரிங்களா??

கொஞ்சம் இருங்க... யாரோ வர்றாங்க.. இப்போ எனக்கு நீங்க என்கூட வர்றது கொஞ்சம் தைரியத்த குடுக்குது...

ஷ்ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் .........

யாரோ பேசிட்டு போறாங்க.. ஹ்ம்ம் இப்போ வாங்க.. இப்போ எங்க போறேன்னு தெரியாது ஆனா எங்க இருந்து வர்றேன்னு தெரியுமா? ஒரு கொலையா பார்த்துட்டு...

எனக்கும் என்னோட பக்கத்துக்கு வீடு மணிக்கும் கொஞ்ச நாளா பிரச்சனை... அன்னைக்கு தெரியாதனமா சண்டையில இருந்த அருவாளால அவன் ஒரு கைய வெட்டிட்டேன்.. என்ன இப்போ அவன் சாப்பிடுற கையால கழுவுறான்.. ஆனா என் மேல அவனுக்கு கொல வெறி..

இதோ இப்போ என்னை கொல்ல ஆளோட வந்தான்.. நான் ஓட ஆரம்பிச்சேன்...

ரெண்டு பேர்.. வெளியூருன்னு நினைக்கிறேன்.. நல்ல வாட்ட சாட்டமா தயார் பண்ணி இருந்தாங்க..

ஓட ஆரம்பிச்சேன்.. இங்க வந்து சிக்கிகிட்டேன்.. இது ஒரு abandoned Factory.. கிட்ட தட்ட சரோஜா படத்துல வருமே அந்த எடம் மாதிரி

கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடி இருக்கேன்... இருட்டு வேற.. என்னோட கால் ஒரு இரும்பு கம்பி தடுக்கி சத்தம் வந்தது... அதை பார்த்துட்டங்க..

வந்துட்டாங்க.. என்னை கிட்ட நெருங்கிட்டங்க.. அப்போ மறுபடியும் ஓட நினச்சு அப்படியே குப்புற விழுந்து மயங்கிட்டேன்.. கண் எல்லாம் இருட்டிடுச்சு கொஞ்ச நேரம் .. ஒரு வழியா இவங்க கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நெனச்சு எந்திரிச்சு பார்த்தா பக்கத்துல இன்னொரு பொணம்..

திக்குன்னு இருந்தது.. அவங்களுக்கு உள்ளே வெட்டிகிட்டு குத்திகிட்டான்களா? ஒரு எழவும் தெரியல.. அங்க குழப்பமா நின்னு பேசிக்கிட்டு இருக்கும்போது நைசா நழுவி வந்துட்டேன்.. அப்போ பிடிச்ச ஓட்டம்...

நல்லவேள நீங்களாவது துணைக்கு கிடைசிங்க... இருங்க.. நாம பேசாம போயி பாப்போமா??? யார கொன்னு இருக்காங்கன்னு??

அட வாங்க சார்..

இதோ இந்த இடது பக்கம் தான் அது நடந்தது.. அட அங்க பாருங்க.. யாருமே இல்ல... அந்த பிணமும் என்ன மாதிரியே வெள்ளை சட்டை போட்டு இருக்கு.. பாவம் யாரு பெத்த பிள்ளையோ???

சரி அந்த பொணத்த பொரட்டி போடுங்க... என்னால முடியல...

தேங்க்ஸ்...

ஆஆ... அது நானே தானா??? ஐயோ என்னோட தலையில அது என்ன?? இரும்பு கம்பி குத்தி இருக்கே??

"செத்தது நான் தானா???????????"

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...

மணியை பார்த்தான் இரவு இரண்டு மணி..

ஹைதராபாத் பனிகால குளிர் இரவில் குளிர் இன்னும் அதிகமானதை உணர்ந்து இருந்தான்.. ஆனாலும் வியர்வை பூத்து இருந்தது..

நடையின் வேகத்தை கூறினான்.. தூரத்தில் ஒரு நாய் குலைத்தது..

அது ஒரு செயின் ரியாக்சன் போல அவன் அருகில் இருந்த நாயை குலைக்க வைத்தது..

காறி எச்சிலை துப்பினான் .. எச்சில் துப்பினால் நாய் பின் தொடராது என்று யாரோ சொல்லி கேட்டு இருந்தான்...

கையில் மட்டும் அது பத்திரமாக.. ச்சே போட்டோகிராபர் தொழிலுக்கு ஏன் தான் வந்தோமோ? நொந்து கொண்டேன்

விடிந்ததும் என்னை தேடுவர்களா? கண்டு பிடித்தால் உயிருடன் விடுவார்களா? நினைக்கும் போது சில்லிட்டது...

உங்களுக்கு தெரிந்திரிக்கும் ஏன் கையில் உள்ளது ஒரு கேமரா..

இரண்டு மணி நேரம் முன்னால்...

இரவுக் காட்சி முடித்து விட்டு வந்து கொண்டு இருந்தவன் ஒரு சத்தத்தை கேட்டு நிமிர்ந்தான்..

அகால வேளையில் ஒரு அனத்தும் சத்தம்..

உடலுறவு கொள்கிறார்களா? விவகாரமான சிந்தனை முளைத்தது..

ஒரே ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்தது.. எட்டி பார்கலாமா? என்னுடைய பகுதி நேர பத்திரிகையாளன் மூளை வேலை செய்தது..

சாக்கடை எங்காவது திறந்திருக்கும், போலீஸ் காரன் யாரவது லஞ்சம் வாங்குவான் என எந்த நேரத்திலும் எதாவது படம் பிடிக்கலாம் செய்தி ஆக்கலாம் என்று எப்போதும் என் உடன் இருக்கும் ஒரு சின்ன கேமரா எனக்குள் கனத்தது...

எட்டி பார்த்தேன்.. இப்போது தனியாக உள்ள வீட்டில் விளக்கெரியும் அறை நோக்கி சென்றேன்.. வேலிச் சுவர் மேல் நின்றேன் ..

"வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்"


எங்கோ படித்த நினைவு.. சாளரத்தை பார்த்தேன்..

ஜன்னல் மேல் உள்ள மழை தடுப்பு சுவர் மேல் ஏறி நின்றேன்.. ஆம் உண்மை தான்..
வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்

நான் பார்த்தது இரண்டு ஆசாமிகள் ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தார்கள்..

அதை இன்னும் இருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

சிவப்பு பனியன் அணிந்த ஒருவன் அந்த பெண்ணை பார்த்து சொத்து பத்திரத்தில் கைஎழுத்து போட மாட்டே? என்றபடி கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தான்.. பக்கத்தில் கத்தை பேப்பர் அட்டையில் கிளிப் செய்யப்பட்டு இருந்தது...

சிலிர் என்று எங்கோ இருந்து வந்த காற்று என்னை ஊடுருவியது...

உடனே கேமரா எடுத்தேன்..

கிளிக்..

கிளிக்...

நழுவியது கேமரா..

நல்லவேளை பிடித்துக் கொண்டேன்..

மறுபடி கிளிக்.. அட நழுவும் போது பிடித்ததில் பிளாஷ் ஆன் ஆகிவிட்டது...

அதில் ஒருவன் அதை பார்த்துக் கொண்டே இருந்தான்..

ஹெய்.. நில்லு.. உன்னதான்... அந்த சிவப்பு பனியன் என்னைபார்த்து கத்தினான் ...

அவன் ஓடி வர எத்தனிப்பது தெரிந்தது..

ச்சே ... இங்கேயுமா தமிழ் ரௌடிகளிடம் மாட்ட வேண்டும்?


ஏறிய வழியில் இறங்கி.. ஓட ஆரம்பித்து ,

இதோ இரண்டு மணிநேரம் ஆயிற்று..

அதோ என் அறை தெரிகிறது.. உங்களிடம் அடுத்து பேசுகிறேன்.. நான் தூங்க வேண்டும்...

சரியாக ஆறு மணி நேரம் கழித்து..

நான் சரியாக உறங்க வில்லை என சொல்ல வேண்டியது இல்லை..

இதோ உடை மாற்றி ஒரு புது வித மேக்கப் செய்து கொண்டு வெளியே வந்தேன்...

மனதுக்குள் ஜெம்ஸ் பாண்ட் படத்தில் வரும் இசை..

அந்த தெருவுக்கு போனேன்.. இப்போது நான் போனது என் நண்பனிடம் இரவல் வாங்கிய யமகாவில் ..

அதோ அந்த சிவப்பு பனியன் போடடிருன்த்தவன்.. இப்போது வெள்ளை சட்டையில்..

ஐயோ என்னைப் பார்த்து விட்டான்... அவனை தாண்டி சென்று அவனை திரும்பி பார்த்தேன்..

டேய் தரணி அவன புடி.. சொல்லியது காதில் விழுந்தது...

ஆனால் என் பின்னால் பார்த்தபடி சொல்கிறானே..

திரும்புவதற்குள் ஒரு கரம் என்னை பற்றியது.. சுதாரித்து பிரேக் போட்டேன்..

ஐயோ நான் காலி..

தரணி என்பவன் அஜானுபகுவாக இருந்தான்..

வாங்க சார் உங்க கிட்ட பேசணும்.. அவன் குரல் கர்ண கொடுரம்..

அதே வீட்டுக்குள் நான் அழைத்துச் செல்லப் பட்டேன்.. இல்லை இழுத்துச் செல்லப்பட்டேன்..

என்னை போட்டோ எடுக்க யாரவது வருவார்களா? யாரவது வாங்களேன் இப்போது பகல் நேரம்.. பிளாஷ் கூட தேவை இல்லை..

எனக்குள்ளே மனது இருந்தாலும் அது தனக்குளே பிதற்ற ஆரம்பித்தது...

உள்ளே சென்றவுடன் சாந்தமாய் ஒரு பெரியவர் குறுந்தாடியுடன்.. ஓஹோ இவர் தான் பெரிய வில்லன் போல..

என்ன தம்பி நேத்து நைட் என்னமோ போட்டோ எடுத்திங்க போல..

அவர் கேட்டவுடன் வியர்த்து..

சாரி சார்.. இதோ இந்த கேமரா தான் .. குடுக்குறேன் என்னை ஒன்னும் பண்ணிடாதிங்க..

ஹா ஹா ஹா.. எல்லோரும் ஏளனமாக சிரித்தார்கள்..

சரி போங்க... பிலிம் ரோலை உருவிக்கொண்டு காமெராவை தூக்கி போட்டார்..

தம்பி.. திரும்பி நடக்க ஆரம்பித்தவனை அவர் குரல் தடுத்தது...

போகிறப்போ வாசல்ல இருக்கு ஒரு போர்டு அத பார்த்துட்டு போங்க..

அப்போது தான் கவனித்தேன் பின்னால் அந்தப் பெண்.. நேற்று கழுத்து நெறி பட்டவள்..

அப்பா இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்ப? கேட்டுக்கொண்டே வந்தாள்...

தலை சுற்றியது .. சீக்கிரம் வெளியே வந்து போர்டுஐ பார்த்தேன்..

ஹைதராபாத் தமிழ் சங்கம்..
தமிழ் மணி நாடகக் குழு..
ஹைதராபாத் - 25

Hyderabad Tamil Sangam
Thamilmani Drama Troop
Hyderabad - 25

தலை சுற்றியது இன்னும் வேகமாக.. உங்களுக்கும் கூடத்தானே?


------------------------------------------------------------------------------------------------

பிரபல பதிவன் ஆகும் முயற்சியில் ஒரு மீள்பதிவு ... ஹி ஹி ஹி ....

Change is Here..... மாற்றம் இங்கே..

வாழ்கையில் நிறைய நிறைய விஷயங்கள் நடக்கும்.. எல்லாம் ஞாபகம் இருக்குமான்னு சந்தேகம் தான் .. ஆனா சிலது உங்களுக்கு தூக்கத்தில் கூட மறக்காது..

சின்ன வயசில் நினைவு தெரிந்தவுடன் படித்த பள்ளி.. அந்த மிஸ்கள்.. LKG படித்தபோ படுத்த மதிய தூக்கம், அம்மா ஸ்கூலில் விட்டுட்டு போனபோது அழுதது.. சமாதனம் செய்து உள்ளே அனுப்பிய சகிலா மிஸ்.. அப்பப்போ மாறின வீடுகள்.. எட்டாவது படிக்கையில் சைட் அடித்தது... என ஒரு பெரிய லிஸ்ட்..

திடீர்னு ஒரு நாள் எனக்கு வயசான மாதிரி ஒரு பீல்.. இப்போ தான் பிறந்து வந்த மாதிரி இன்னொரு பீல்..

வீட்டுல பரபரப்பா என்னென்னமோ செய்து கொண்டு இருந்தாங்க.. என்னக்கு குழப்பம் ....

என்னோட வயச கணக்கு போட்டு பார்த்தேன்.. ஆச்சு 28 ..

நிஜம்மா நான் பிறந்ததுல இருந்து Bachelor ஆகவே இருந்தேன்.. ஏன் படித்தது கூட Bachelor of Technology தான் ...

இப்போது என்னோட எல்லா account களிலும் மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளி விடப்பட்டுளேன் .. Facebook, Orkut, Twitter.... இன்னும் எத்தனை எத்தனை..

ஒரு விதமாக மந்திரிச்சு விடப்பட்ட கோழியாக சுத்திகிட்டு இருக்கேன்...

பாருங்க ஞாபகங்கள பேச ஆரம்பிச்சு எதையோ பேசிகிட்டு இருக்கேன்..

என்னோட வாழ்கையில ஒரு சம்பவம் நடக்க போகுது.. அதை நான் அம்னிசியாவிலும் மறக்க முடியாத சம்பவம்..

The change is here,...... My Status is going to Change from Single to Married...

என் வாழ்க்கைக்கு என்று ஒரு தங்கமணியை பார்த்து விட்டார்கள் என் பெற்றோர்கள்.... வரும் இருபதாம் தேதி single ஆக இருந்த சிங்கம் (சூர்யா படம் இல்லங்க) குடும்பஸ்தன் ஆக போகுது...

இடம் : ஸ்ரீ ரெங்க மஹால், மதுரை - 1
நாள் : 20.06.10
நேரம்: 8.30 - 10.00 AM

எல்லா பதிவுலக நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்...

இப்படிக்கு,
ராம்ஜி