அந்த பக்கம் பார்க்காதே...
மனசு சொல்லியது....
இருந்தாலும் கண்கள் திரும்புவதற்கே பார்த்தது.... அதை பார்க்க..
ரயில் சத்தம் தூரத்தில் கேட்டது... ரயில் நிலையதிருக்கு இன்னும் ஒரு கிலோமீட்டர் இருக்கும் என நினைத்தேன்...
இருக்கிற டென்ஷன் வியர்வை கூட வரவில்லை.. என்ன வினோதம்?
ரயில் வந்தாலும் ரயிலில் ஏறப்போகிறேனா ? கேள்வி கேட்டுக்கொண்டேன்..
எங்க போகிறோம் என தெரியாமல் போகப்போகிறோம எனவும் தெரியாமல் ஒன்பது முப்பதுக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடிக்கும் பயணியை போல வேகமாக நடந்தேன்... தயவு செஞ்சு என்னோட நடந்து வர்ரிங்களா??
கொஞ்சம் இருங்க... யாரோ வர்றாங்க.. இப்போ எனக்கு நீங்க என்கூட வர்றது கொஞ்சம் தைரியத்த குடுக்குது...
ஷ்ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் .........
யாரோ பேசிட்டு போறாங்க.. ஹ்ம்ம் இப்போ வாங்க.. இப்போ எங்க போறேன்னு தெரியாது ஆனா எங்க இருந்து வர்றேன்னு தெரியுமா? ஒரு கொலையா பார்த்துட்டு...
எனக்கும் என்னோட பக்கத்துக்கு வீடு மணிக்கும் கொஞ்ச நாளா பிரச்சனை... அன்னைக்கு தெரியாதனமா சண்டையில இருந்த அருவாளால அவன் ஒரு கைய வெட்டிட்டேன்.. என்ன இப்போ அவன் சாப்பிடுற கையால கழுவுறான்.. ஆனா என் மேல அவனுக்கு கொல வெறி..
இதோ இப்போ என்னை கொல்ல ஆளோட வந்தான்.. நான் ஓட ஆரம்பிச்சேன்...
ரெண்டு பேர்.. வெளியூருன்னு நினைக்கிறேன்.. நல்ல வாட்ட சாட்டமா தயார் பண்ணி இருந்தாங்க..
ஓட ஆரம்பிச்சேன்.. இங்க வந்து சிக்கிகிட்டேன்.. இது ஒரு abandoned Factory.. கிட்ட தட்ட சரோஜா படத்துல வருமே அந்த எடம் மாதிரி
கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடி இருக்கேன்... இருட்டு வேற.. என்னோட கால் ஒரு இரும்பு கம்பி தடுக்கி சத்தம் வந்தது... அதை பார்த்துட்டங்க..
வந்துட்டாங்க.. என்னை கிட்ட நெருங்கிட்டங்க.. அப்போ மறுபடியும் ஓட நினச்சு அப்படியே குப்புற விழுந்து மயங்கிட்டேன்.. கண் எல்லாம் இருட்டிடுச்சு கொஞ்ச நேரம் .. ஒரு வழியா இவங்க கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நெனச்சு எந்திரிச்சு பார்த்தா பக்கத்துல இன்னொரு பொணம்..
திக்குன்னு இருந்தது.. அவங்களுக்கு உள்ளே வெட்டிகிட்டு குத்திகிட்டான்களா? ஒரு எழவும் தெரியல.. அங்க குழப்பமா நின்னு பேசிக்கிட்டு இருக்கும்போது நைசா நழுவி வந்துட்டேன்.. அப்போ பிடிச்ச ஓட்டம்...
நல்லவேள நீங்களாவது துணைக்கு கிடைசிங்க... இருங்க.. நாம பேசாம போயி பாப்போமா??? யார கொன்னு இருக்காங்கன்னு??
அட வாங்க சார்..
இதோ இந்த இடது பக்கம் தான் அது நடந்தது.. அட அங்க பாருங்க.. யாருமே இல்ல... அந்த பிணமும் என்ன மாதிரியே வெள்ளை சட்டை போட்டு இருக்கு.. பாவம் யாரு பெத்த பிள்ளையோ???
சரி அந்த பொணத்த பொரட்டி போடுங்க... என்னால முடியல...
தேங்க்ஸ்...
ஆஆ... அது நானே தானா??? ஐயோ என்னோட தலையில அது என்ன?? இரும்பு கம்பி குத்தி இருக்கே??
"செத்தது நான் தானா???????????"
அடி ஆத்தாட்டி எம்மாம்பெரிய ஆச்சரியமா இருக்கே இந்த பதிவு
ReplyDelete♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
ReplyDeleteThanks for coming.. and thanks for comments..