Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, February 28, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா... Mixed Reactions of me..

விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனம் எல்லாம் இல்ல.. எனக்கு படம் எடுக்க தெரியாது.. அதனால நான் விமர்சனம் பண்றது சரியில்ல.. ஆனா படம் பார்க்க தெரியும்.. நான் என்ன பீல் பண்ணேன்னு எழுதலாம் அப்படின்னு நெனச்சேன்.. எழுதுறேன்..

முதல் பாதி...

சிம்பு த்ரிஷா கடலை..

சிம்பு பார்த்தவுடன் காதல்.. ஒபெநிங் சாங் இல்லை ஆனால் பெயர் போடும்போது யெங் சூப்பர் ஸ்டார் என போடப்படுகிறது..(ஐயஹோ!!!!!)

தன்னைவிட ஒரு வயசு அதிகமான பொண்ண (த்ரிஷா) பார்த்தவுடன் லவ் பண்றார் நம்மாளு (சிம்பு).. திரிசாவுக்கு அப்போ குழப்பம் வேணுமா வேண்டாமான்னு.. அப்போ ஆரம்பிக்குது கடைசிவரைக்கும் அது தொடருது...

கொஞ்ச நேரம் லவ் பண்றார் அப்பறம் நண்பர்களா இருப்போம்னு சொல்றார்.. மெல்லவும் முடியல துப்பவும் முடியல..

சிம்பு கேரளா போயி த்ரிஷாவ டாவடிக்கிறார்.. வரும்போது ட்ரைனில் சந்திக்கிறார் த்ரிஷாவ (wanted ஆ தான்) அப்பறம் முத்தங்கள் உதட்டிலும்!!!

அடுத்தநாள் தான் வந்து கேக்கிறார்.. நண்பர்கள் இப்படி தான் behave பண்ணுவாங்களா அப்படின்னு.. குழப்பமா த்ரிஷா ??

இரண்டாம் பாதி..
டைரக்டர் சிம்பு..



Asst. Director சிம்பு ... படத்தில் பணிபுரிகிறார்..

காதலில் விரிசல் (சத்தியமா தெரியல எதுக்காக த்ரிஷா வேணாம்னு சொல்றங்கன்னு.. கொஞ்ச நாள் பேசலைன்னா காதல் போயிடுமா?? என்ன பாஸ் இது????!!! என்னவா வேணும்னாலும் இருக்கட்டும் SMSஅனுப்பி காதலை கட் பண்றது ரொம்ப over ஆமா..)

அப்பறம் டைரக்டர் ஆகிறார் சிம்பு..

எஸ்....
த்ரிஷா மேல் வைத்த காதலை படமாக எடுக்கிறார்..

அவ்ளோ தான்...




படம் முழுக்க இருந்தவை.....


பேசுறாங்க... எல்லாரும் பேசுறாங்க .. Englishla பேசுறாங்க.. தமிழ்ல பேசுறாங்க.. தங்க்லீஷ் ல பேசுறாங்க....

அய்யா கெளதம்.. நீங்க ஹாலிவுட் ரேஞ்சுல தமிழ்படம் எடுக்க முயற்சிக்கிரிங்க.. ஆனா அதை நம்ம மொழியிலேயே ட்ரை பண்ணலாமே? ஏற்கனவே பசங்க எல்லாரும் இப்போ i love you சொல்றதில்ல (உங்க புண்ணியத்துல) .. எல்லாரும் i am in love with you தான் சொல்றாங்க.. அந்த cameraman கேரக்டர் நல்ல பண்ணி இருந்தாரு.. ஆனா அவருக்கு இங்கிலீஷ் பேசுறதுக்கு கஷ்டமா இருக்கு .. ஏங்க அவர கஷ்டப்படுத்துறீங்க? அவருக்கும்மா வைக்கணும்?

மத்தபடி படம் பாக்குறதுக்கு குளிர்ச்சியா இருந்தது.. நல்ல இசை.. (இசை புயல் இல்ல இசை தென்றல்)..

மத்தபடி எனக்கு உங்களால suspense வைக்க முடியல.. I guessed it already.. so better luck next time..

ஏற்கனவே வடிவேலு இந்த படத்தின் கதையை சொல்லிவிட்டார் .. எப்படின்னு கேக்குறிங்கள??...
!!!!!த்ரிஷா இல்லன்ன திவ்யா...!!!!!!!!




விண்ணைத்தாண்டி வருவாயா.. 'A' center தாண்டி வராதுன்னு நினைக்கிறேன் .. ஆல் தி பெஸ்ட் ...

Monday, June 29, 2009

பசங்க படத்துல புடிச்ச சில விசயங்க..

என்னடா எல்லாரும் நாடோடிகள் படத்த கொண்டாடும் போது இவன் வந்து பசங்க படத்த பத்தி விமர்சனம் எழுதிருவானோன்னு நினைக்காதிங்க.. என்ன பண்ண மக்களே.. புடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருந்ததனால புடுங்கிப்போட்ட ஆணிகள் குண்டிக்கடியில குத்துரதனால நான் இந்த பதிவ எழுதி முடிக்காம இருந்தது...

படத்த பத்தி எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு புடிச்ச சில விஷயங்கள் இதோ..

> பேருக்கு பின்னாடி பட்டம் போடுறது.. (இது குழந்தைகளோட லட்சியத்த அடிக்கடி ஞாபகப்படுத்தும்)

> அப்பா அம்மா சண்டை குழந்தைங்க மத்தில எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துதுன்னு..

> மத்தவங்க சொல்றத கேக்குறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும்னு மனச மொத தயார் பண்ணி சொல்ல வேண்டிய விசயத்த சொல்றது.. (அந்த வாத்தி அதை சொல்லும் போது அன்புவின் அப்பா காலை கீழே போடுவது ஆணவத்தை விடுத்து கேட்க ஆரம்பிக்கிற மனநிலையை உணர்த்தியது)

> சின்ன சின்ன விசயங்கள கூட பாராட்ட அது பெரிய சாதனைகளை செய்ய தூண்டும் அப்பிடிங்கிற கருத்து..

> அந்த காதல ஜோடி.. அவர்களின் நெருக்கத்தை ரிங்க்டோன் மூலமாக சொல்லியது..

> எல்லா இளைய முதிய தலைவர் தளபதி என்ன எல்லா ஸ்டார்களையும் ஓட்டியது (அன்புவின் அறிமுகம்)

> இசை.. பாடல்கள்.

> நடித்த எல்லா பசங்க...

> முக்கியமாக எந்த கவலையும் இல்லாமல் தன் பாட்டுக்கு சேட்டைகளை செய்யும் புஜ்ஜிமா...

> டைரக்டர் சார்.. நம்ம புஜ்ஜிமாவ வச்சு எப்பிடி படம் எடுத்திங்க.? அப்பிடின்னு கேக்க வச்சவர்..

இப்படி நிரே சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆஅனால் மீண்டும் ஆணிகள் மேசைமேல் கொட்டி கிடக்கின்ற படியால், இத்துடன் விடை பெறுகிறேன்...

கொஞ்சம் வோட் பண்ணுங்க பாஸ்... ப்ளீஸ்..