Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Tuesday, July 21, 2009

திகில் கதையில் ஒரு விடுகதை...

நிஜன்யன்...

பிரபல எழுத்தாளர்.. திகில், மர்மங்கள், ஆவி, அமானுஷ்யம் இவை இவரின் கதைக் களம்..

இவரின் கதை எழுதும் பாணியே வித்யாசமானது தான்...

வீடு? தத்தனேரி சுடுகாடு தெரியுமா? அதில் எரியும் பிணங்களை இவர் வீட்டில் இருந்து பார்க்கலாம்...

தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு தான் கதை எழுத ஆரம்பிப்பார்..

ஒரு செம்பு பால் , ஒரு டைரி , அந்த டைரியில் ஒரு சிவப்பு மை பேனா.. இது தான் அவர் கதைக் கருவிகள்..

எகிப்திய நாகரிகம் மற்றும் மம்மிக்களை நம்பும் ஆசாமி.. அதனாலேயோ என்னமோ ஒரு பூனை வளர்க்கிறார்.. அதுவும் சாதாரண பூனை போல் அல்லாமல் ஒரு சின்ன பொமேரியன் நாய் குட்டி போல இருக்கும்..

அன்று அதே போல் கதை எழுத உட்கார்ந்தார்..

காலண்டர் அம்மாவாசை என அந்த நாளை சொன்னது....

எதோ ஒரு விதமான இறுக்கம் அவரை சூழ்ந்து இருப்பதை உணர்ந்தார்..

என்றும் இல்லாத இறுக்கம்.. இன்றைக்கு??

மணி பதினொன்று ஐம்பத்தி ஐந்து..

பால் செம்புடன் டைரி மற்றும் பேனாவை மேஜையில் வைத்தார்..

டிங் . டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங் . டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்..

பன்னிரண்டு மணி அடித்தது...

தூரத்தில் ஒரு நாயின் குரல்.. அது குலைப்பதாக தெரியவில்லை...

ஒரு வேதனை கலந்த ஒரு குரலில் அது ஊளையிட்டது..

உட்கார்ந்தார்.. எழுத ஆரம்பித்தார்.. ஒரு பக்கம்.. மிக சீக்கிரமாக முடிந்திருந்தது..

பக்கம் முழுவதும் ரத்தத்தால் எழுதியது போல சிவப்பு எழுத்துக்களால் நிரப்பி இருந்தார்...

சில்லென அப்போது ஒரு காற்று...

உடம்பை மட்டும் அல்ல... எலும்பையும் ஊடுருவும் குளிர் கொண்ட காற்று..

ஜன்னல்கள் அடித்துக்கொண்டன.. திரைச் சீலைகள் பரபரத்தன..

மெதுவாக ஒரு அழுத்தமான மனநிலையுடன் எழுந்து ஜன்னலை மூடச்சென்றார்..

டங்க்....

ஒரு பெரிய சத்தம்.. திரும்பி பார்த்தார்.. அவர் வளர்த்த பூனை மேஜைமேல் ....

பால் சொம்பு தரையில் உருண்டு கொண்டு இருந்தது ..

விகாரமாய் பார்த்து அந்த பூனை..

இரண்டு அடி எடுத்து வைத்தவுடன் தவ்வி மேலே ஏறி காணமல் போனது,,,

அங்கே டைரி மேல் பால் கொட்டிக்கிடந்தது...

அது என்னவாகி இருக்கும்?? யூகிக்க முடிகிறதா??




விடைக்கு,,,
இங்கே மௌஸ் கொண்டு ப்ளாக் செய்து பார்க்கவும்...

>>>சாதரண மில்க் டைரி மில்க் ஆகி இருக்கும்...<<<



Wednesday, July 15, 2009

ஒரு 18+ ஜோக்.. வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்..

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு அசைவ ஜோக் .. பிடிக்காதவர்கள் இங்கு நிறுத்திக்கொள்ளலாம்.. ஓரக்கண்னால் தொடர்பவர்கள் தொடரலாம்

நம்மளுக்கு வயசு எழுவது எதோ ஒரு காரணம் அவர் ஒரு டாக்டர போயி பாக்குறார்.. அவரும் பார்த்துட்டு விந்தணு எண்ணிக்கை டெஸ்ட் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டார்...

எப்பிடி டாக்டர் கொண்டு வர்றதுன்னு கேட்டாரு நம்மாளு..

ஒரு சின்ன மூடியோட இறக்குற டப்பா மாதிரி இருந்தத குடுத்துட்டு இதுல கொண்டு வாங்கன்னு சொல்லிட்டார் நம்ம டாக்டர்..

அடுத்த நாள் வெறும் டப்பாவோட வந்தாரு நம்மாளு.. ஒண்ணும் பேசாம சரி நாளைக்கு வாங்கன்னு சொல்லிட்டார் டாக்டர்..

அடுத்த நாள் வந்தார்.. அபபவும் கையில காலி டப்பா தான்.. அப்படியே ஷாக் ஆயிட்டார் டாக்டர்.. என்னங்க என்ன ஆச்சுன்னு கேட்டார்..

இல்ல டாக்டர் முதல்ல நான் கை வச்சு ட்ரை பண்ணேன்.. முடியல .. கொஞ்ச நேரம் ட்ரை பண்ணதுல மூச்சு வேற வாங்க ஆரம்பிச்சது..

அப்பறம் என்னோட பொண்டாட்டி கூட ட்ரை பண்ணா.. அவ இன்னும் ரெண்டு கையும் வச்சு முயற்சி பண்ணா மொதல்ல..முடியலங்கவும் வாயல கூட ட்ரை பண்ணா ..

அதுவும் முடியாம போக தான் பக்கத்து வீட்டுக்காரம்மா வந்து ட்ரை பண்ணங்க.. அவங்களும் கைய வச்சு ட்ரை பண்ணங்க.. வாய் வச்சு ட்ரை பண்ணங்க ஒண்ணும் முடியல..

நேத்து அத தான் சொல்ல வந்தேன் நீங்க கெளம்ப சொல்லிடிங்க அப்படின்னாரு...

டாக்டருக்கு ஒண்ணுமே புரியல... நெஜம்மாவே பக்கத்து வீட்டு பொம்பளய எல்லாம் இத செய்ய சொன்னிங்களா? அதிர்ச்சியோட எல்லைல நின்னு கேட்டாரு..

அதுக்கு நம்மாளு ஆமா டாக்டர்.. அதனால தான் உங்க கிட்ட இந்த டப்பாவ குடுத்துட்டு மூடி லூசா இருக்குற டப்பாவா வாங்கிட்டு போலாம்னு வந்தேன் அப்படின்னாரு நம்மாளு..

டாக்டருக்கு மயக்கம் வராத குறை தான்...

Tuesday, July 14, 2009

ரசிகனும் ரஸ்ஸல் க்ரோவும்...


ரஸ்ஸல் க்ரோவ் க்லாடிஏடர் படத்தில் வந்தாரே அவர் தான்... மிகவும் அருமையான மனிதர் .. எல்லோரிடமும் நட்புடன் பழகுபவர்..

ஒரு விளம்பர படத்திற்காக சமிபத்தில் இந்தியா வந்திருந்தார்.. அவருக்கு ஆக்ரா தாஜ் மகாலில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது..

இடைவேளையின் போது அருகில் இருக்கும் எல்லோரிடமும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார்..

இங்கு வந்த போது தாடி வைத்து இருந்தார்.. நன்றாக கோட் சூட்இல் கம்பீரமாக இருந்தார்

எல்லோரிடமும் நன்றாக பேசும் குணம் உடையவரை பார்த்தவுடன் ஆக்ரா சுற்றிப் பார்க்க சென்ற தமிழ் இளைஞர் குமாருக்கு அவரிடம் பேச வேண்டும் என்று ஆவல் எழுந்தது...

உடனே தாழ்வு மனப்பான்மையும் ஒட்டிக்கொண்டது.. அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு ஒருவாராக போய் பேசியே விட்டான்..

என்ன பேச எனத்தெரியாமல் உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டான் ..

அதுவரை பேசிக்கொண்டு இருந்தவர் ஒரு பார்வை பார்த்து அமைதி ஆகிவிட்டார்... ரஸ்ஸல் க்ரோவ் பற்றி நன்றாக தெரிந்தவருக்கு இது தெரியும் இருந்தாலும் அந்த கேள்வியை கேட்டவுடன் ஏன் அவர் மவுனமாகி விட்டார் தெரியுமா??













































விடை தெரிய மௌஸ் கொண்டு பிளாக் செய்து பார்க்கவும்..
>>> அவருக்கு தமிழ் தெரியாது.. ஹெஹெஹெ..<<