Tuesday, June 30, 2009

மஞ்சள் வண்டி கொள்ளைக்காரர்கள்...

சென்னை...

பல வித்தியாசமான மனிதர்களையும் இடங்களையும் கொண்டுள்ளது..

கோவில்கள், மசூதிகள், சர்ச்கள் என புகழ் பெற்ற பல தலங்கள் இருந்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், திருட்டு, பித்தலாட்டம், கள்ளக்காதல் என அநியாயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது..

இதில் கொள்ளை மற்றும் திருட்டு பல வகையில் செய்கின்றனர்.. வாகன திருட்டு, A/C மெஷின் கழட்டி திருட்டு, கருப்பு பணம் மட்டும் கொள்ளை, என பல வகையில் செய்கிறார்கள்.. ஆனால் நம்மை சுற்றியே ஒரு கொள்ளைக்கும்பல் மஞ்சள் வண்டியில் வலம் வருவது எத்தனை பேருக்கு தெரியும்...

தெரியாது என இப்போது நினைப்பவர்களுக்கும் தெரியும்... ஆம்..

சென்னைவாசிகள் சில விசயங்களை பிடிக்காது என்றாலும் அதை தான் அவர்கள் நம்பி செய்ய வேண்டும் என சில தலை எழுத்து உண்டு..

அதில் மிக மிக முக்கியமானது..

ஆட்டோ ரிக்ஸா...

இவர்களால் சென்னை படும் பாடு கொஞ்சநஞ்சம் அல்ல... எனக்கு நேர்ந்த நான் பார்த்த சிலவற்றை நான் இங்கு பகிர்கிறேன்..

> எங்கள் வீடு சூளைமேடில் உள்ளது.. ஒரு முறை ஊருக்கு செல்ல நான் ஒரு ஆட்டோவை வாடகைக்கு பிடித்தேன்... நான் செல்ல வேண்டிய இடம் எழும்பூர்.. ஏறி அமரும் போது கவனித்தேன் அந்த மீட்டர் digital என்றும் ஏற்கனவே ஓடிக்கொண்டு இருந்தது என்றும்...
வாடகை பேசியது எண்பது ரூபாய்.. அதுவும் நூறு ரூபாய் சொல்லி பேரம் பேசி குறைத்தது... எனவே எனக்கு மீட்டர் எவ்வளவு தான் ஆகிறது என பார்க்க இயற்கையாகவே ஒரு உந்தல் இருந்தது... நான் குறித்துக்கொண்டேன் ..
எழும்பூர் சென்று இறங்கும் போது இருந்த மீட்டர் அளவு.. அதை கழித்துப்பார்த்தால் வருவது எவ்வளவு ரூபாயாகும் என நினைக்கிறீர்கள்..??


ரூபாய் 28/-

ஒரு சிறிய கணக்கு...

Fare Asked = Rs 80
Actual Meter Reading = Rs 28

Fare asked = 2.87 times of actual meter reading...

ஆனால் அந்த ஆடோகார நாய் சொன்னது.. அதுல இருவது ரூபா வரும் பத்து ரூபா கூட வரும்.. பேசுனது பேசுனது தான் சார்.. எடுங்க எண்பது ரூபாய.. என்றான் அந்த தே........ பையன்..


அதாவது நாம் பேரம் பேசியே கிட்டத்தட்ட மூன்று மடங்கு ஏமாறுகின்றோம்..
மேலே சொன்ன கொள்ளை திருட்டு வழிகள் உங்கள் கண்முன்னால் நடப்பவை அல்ல.. ஆனால் இந்த திருட்டு? உங்கள் கண் முன்னால் நடக்கிறது.. அன்றில் இருந்து மிக அவசியம், அவசரம் என்றாலே நான் ஆட்டோவை உபயோகிக்கிறேன்..

இப்போது மாநகர பேருந்து நிறைய நல்ல நல்ல பேருந்துகள் விட்டு இருக்கிறார்கள்.. A/c பஸ் கூட உண்டு.. ஆட்டோ உபயோகிக்கும் எண்ணம் இருந்தால் சிறிது முன்னமே கிளம்பி bus stop செல்வதை இப்போது வழக்கமாக கொண்டுள்ளேன்.. ஒரு நடை போன மாதிரியும் ஆச்சு.. (வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளை ஆச்சு ) இல்லை என்றால் share auto பயன் படுத்துகிறேன்.. இல்லை என்றால் மின்சார ரயில்..
நாம் ஏமாறாமல் இருப்பது நம் கையில் தான் இருக்கு..??
ரொம்ப தேவை என்றால் மட்டுமே நான் ஆட்டோவை நாடுவது உண்டு..

நான் இதையே நீங்களும் செய்யுங்கள் என சொல்லவில்லை..

>பஸ் பிடிக்க கொஞ்ச தூரம் நடந்தால் உடம்புக்கும் நல்லது.. பணமும் மிச்சமாகும் ..

>இல்லை என்றால் எதாவது ஒரு நல்ல ஆட்டோ டிரைவர்ஐ பழக்கபடுத்திக் கொள்ளலாம்..

>சின்ன சின்ன தூரங்களுக்கு சைக்கிள் உபயோகப் படுத்தலாம்.. உடலுக்கும் ஆரோக்யம்.. சுற்றுப் புற சூழலுக்கும் நல்லது..

சரி இந்த விசயங்களுக்கு எல்லாம் முடிவே இல்லையா? பெங்களூர் ஹைதராபாத் மாதிரியான ஊர்களில் உள்ள மாதிரியான மீட்டர் சிஸ்டம் கொண்டு வர முடியாதா? முடியாதென்றால் ஏன்?

எனக்கு தெரிஞ்ச கேள்விப்பட்ட உண்மைகள்..
நிறைய ஆட்டோ இங்கே வாடகைக்கு ஓடுகின்றது.. ஆட்டோவுக்கு சொந்தக்காரகள் ஒன்று கீழ்மட்ட அரசியல்வா(வியா)தியாக உள்ளனர்.. இல்லை போலீஸ்காரர்களாக உள்ளனர்.. சோ (இது s o சோ ) இவர்கள் பிழைப்பில் மண் விழக்கூடும் மீட்டர் சிஸ்டம் வருவதை விரும்பவும் மாட்டார்கள்.. இதனால் இந்த ஆட்டோ உரிமையாளர்கள் பிழைக்க நாம் நித்தம் ஏமாற என்ன எங்களுக்கு தலை எழுத்தா ?

சிந்திக்க தகுந்தவை தான் இவை என நினைக்கிறேன்.. பிடித்திருந்தால் வாக்குகளை குத்து குத்துவென குத்துங்கள்..(ஒரு வேளை வீட்டுக்கு ஆட்டோ வருமோ?)

Monday, June 29, 2009

பசங்க படத்துல புடிச்ச சில விசயங்க..

என்னடா எல்லாரும் நாடோடிகள் படத்த கொண்டாடும் போது இவன் வந்து பசங்க படத்த பத்தி விமர்சனம் எழுதிருவானோன்னு நினைக்காதிங்க.. என்ன பண்ண மக்களே.. புடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருந்ததனால புடுங்கிப்போட்ட ஆணிகள் குண்டிக்கடியில குத்துரதனால நான் இந்த பதிவ எழுதி முடிக்காம இருந்தது...

படத்த பத்தி எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு புடிச்ச சில விஷயங்கள் இதோ..

> பேருக்கு பின்னாடி பட்டம் போடுறது.. (இது குழந்தைகளோட லட்சியத்த அடிக்கடி ஞாபகப்படுத்தும்)

> அப்பா அம்மா சண்டை குழந்தைங்க மத்தில எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துதுன்னு..

> மத்தவங்க சொல்றத கேக்குறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும்னு மனச மொத தயார் பண்ணி சொல்ல வேண்டிய விசயத்த சொல்றது.. (அந்த வாத்தி அதை சொல்லும் போது அன்புவின் அப்பா காலை கீழே போடுவது ஆணவத்தை விடுத்து கேட்க ஆரம்பிக்கிற மனநிலையை உணர்த்தியது)

> சின்ன சின்ன விசயங்கள கூட பாராட்ட அது பெரிய சாதனைகளை செய்ய தூண்டும் அப்பிடிங்கிற கருத்து..

> அந்த காதல ஜோடி.. அவர்களின் நெருக்கத்தை ரிங்க்டோன் மூலமாக சொல்லியது..

> எல்லா இளைய முதிய தலைவர் தளபதி என்ன எல்லா ஸ்டார்களையும் ஓட்டியது (அன்புவின் அறிமுகம்)

> இசை.. பாடல்கள்.

> நடித்த எல்லா பசங்க...

> முக்கியமாக எந்த கவலையும் இல்லாமல் தன் பாட்டுக்கு சேட்டைகளை செய்யும் புஜ்ஜிமா...

> டைரக்டர் சார்.. நம்ம புஜ்ஜிமாவ வச்சு எப்பிடி படம் எடுத்திங்க.? அப்பிடின்னு கேக்க வச்சவர்..

இப்படி நிரே சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆஅனால் மீண்டும் ஆணிகள் மேசைமேல் கொட்டி கிடக்கின்ற படியால், இத்துடன் விடை பெறுகிறேன்...

கொஞ்சம் வோட் பண்ணுங்க பாஸ்... ப்ளீஸ்..

Friday, June 26, 2009

சமிபத்தில் கேட்ட பிடித்த பாடல்.. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து..

சமீபத்தில் பாதித்த இரண்டு பாடல்கள்..

பெம்மானே .. ஆயிரத்தில் ஒருவன் படப்பாடல்.. கேட்டவுடன் என்னை பாதித்தது...

இந்தப் பாடலை கேட்டவுடன் எனக்கு என்னவோ சோழர் காலம் ஞாபகம் வருகின்றதோ இல்லையோ இப்போதிருக்கும் ஈழர் காலம் ஞாபகம் வருகின்றது..

வைரமுத்து எவ்வளவு பேர் வந்தாலும் அவர் முத்தரை இன்னும் அவரிடமே..

வார்த்தைகளை வார்த்து இருக்கிறார்..
சோகத்தை சுரந்து இருக்கிறார்..

பாம்பே ஜெயஸ்ரீ .. உருகி இருக்கிறார்...

என்னை பாதித்த சில வரிகள்...

புலம் பெயர்ந்தோம்..
பொலிவு இழந்தோம் ..
புலன் கழிந்தோம்..
அழுதழுது உயிர் கிழிந்தோம்..
அருள்கோனே...

மூப்பானோம்..
முன் மெலிந்து முடமானோம்...
மூச்சு விடும் பிணமானோம்...
முக்கடோனே...


வாழ்ந்தாலும்
சங்கதிர வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல்
சாகமாட்டோம்...

இன்னொரு பாடல்.. இதே படத்தில் வரும் "தாய் தின்ற மண்ணே "

அய்யா பி பி ஸ்ரீநிவாஸ்...
வணங்குகிறேன் அய்யா...
தமிழ் உச்சரிப்பின் உச்சம் நீங்கள்..
வலியை பாடலில் வெளிப்படுத்தி ..
அவமானத்தை அடிமனது வரை கொண்டு சென்று இருக்கின்றீர்கள்...

இதே பாடலை விஜய் ஜேசுதாஸ் இன்னொரு version பாடி இருக்கிறார்.. அதுவும் அருமை.. அது இரண்டு பத்திகளை இருக்கின்றது..

வைரமுத்து அவர்களே...
அருமை.. அருமை..
என்ன சொல்வது.. என் தாய் நாட்டை யாரவது ஆண்டு நான் அதன் மன்னனானால் என்னுடைய மனநிலை இந்த பாட்டை போல தான் இருக்கும்....

அரித்தெடுக்கும் அவமானம்..
இதயத்தை இடிக்கும் இயலாமை ..
வரிகளில் உருக்கி வார்த்து இருக்கிறார்....

எனக்கு பிடித்து இருக்கும் சில வரிகள்.. இந்தப் பாடலில் இருந்து...

கயல் விளையாடும்
வயல் வெளி தேடி..
காய்ந்து கழிந்தன கண்கள்..

சிலை வடிமேவும்
உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்..

புலிக்கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொரிப்பதுவோ??

தங்கமே என்னை
தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே
புரள்வோம்..

இன்னும் எவ்வளவோ சொல்லலாம் ... சொல்லிக்கொண்டே இருக்கலாம்..

இந்த இரண்டு பாடல்களையும் திரும்ப திரும்ப கேட்க வைப்பது என்ன உணர்வு என நான் தேடிக் கொண்டு இருந்தபோது ஒன்று தோன்றியது...

இப்போதிருக்கும் ஈழத் தமிழர் நிலைமையும் இந்த பாடல்களோடு கொஞ்சம் அல்ல மிகவே பொருந்திப் போகிறது...

கேட்டு பார்த்துட்டு கருத்தை சொல்லுங்க..

சுள்ளான் பேர சொன்னா....

அண்ணே அக்கா..

இந்த பயபுள்ள கொஞ்சம் ஓவரா பேசுவான்..
அப்பறம் கொஞ்சம் திருவாலித்தனம் செஞ்சுட்டு திரியிறவன்,,
சேட்ட கொஞ்சம் ஜாஸ்தி தான்..
ஆனா பாசக்கார பய...

நல்ல பெரியவுக எழுதுறதா பார்த்து இவனுக்கும் ப்லாக் எழுத ஆச வந்துடுச்சு..
இதுக்கு முன்னாடி கொஞ்சநாள் நிழல்படம் nizhalpadam.blogspot அப்பிடின்ன விலாசத்துல எழுதிட்டு தான் இருந்தான்.. ஆனா இதப்போயி எவன் கண்ணு வச்சானோ.. ntamil அப்பிடின்ன படுபாவிப் பயலால பொசகெட்டு போச்சு..

கூகிள் காரன் என்ன இவன் மாப்பிள்ளையா? ஒடனே தூக்கிட்டான்.. அட ப்லோகன்ங்க..

சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சான் பயலுக்கு பொழுது போகணும்ல? அதனால கொஞ்ச நாள் முன்னாடி ரசிச்சு ரசிச்சு தியேட்டர்லயேய் ரெண்டுவாட்டி பாத்த படமான பசங்க படத்துல இருந்து இவன மாதிரியே ஒரு சுள்ளான் சொல்ற வசனத்த சுட்டு ஒரு பலோக திரும்பவும் ஆரம்பிச்சுட்டான்..

எனவே மக்களே.. அப்பப்போ இங்கிட்டு வந்துட்டு போனிங்கன்னா நல்லா இருக்கும்...


ஆனா ஒன்னே ஒன்னு... நாங்க பயப்படவே மாட்டோம்ல.. எப்புடீ ???