Monday, June 29, 2009

பசங்க படத்துல புடிச்ச சில விசயங்க..

என்னடா எல்லாரும் நாடோடிகள் படத்த கொண்டாடும் போது இவன் வந்து பசங்க படத்த பத்தி விமர்சனம் எழுதிருவானோன்னு நினைக்காதிங்க.. என்ன பண்ண மக்களே.. புடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருந்ததனால புடுங்கிப்போட்ட ஆணிகள் குண்டிக்கடியில குத்துரதனால நான் இந்த பதிவ எழுதி முடிக்காம இருந்தது...

படத்த பத்தி எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு புடிச்ச சில விஷயங்கள் இதோ..

> பேருக்கு பின்னாடி பட்டம் போடுறது.. (இது குழந்தைகளோட லட்சியத்த அடிக்கடி ஞாபகப்படுத்தும்)

> அப்பா அம்மா சண்டை குழந்தைங்க மத்தில எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துதுன்னு..

> மத்தவங்க சொல்றத கேக்குறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும்னு மனச மொத தயார் பண்ணி சொல்ல வேண்டிய விசயத்த சொல்றது.. (அந்த வாத்தி அதை சொல்லும் போது அன்புவின் அப்பா காலை கீழே போடுவது ஆணவத்தை விடுத்து கேட்க ஆரம்பிக்கிற மனநிலையை உணர்த்தியது)

> சின்ன சின்ன விசயங்கள கூட பாராட்ட அது பெரிய சாதனைகளை செய்ய தூண்டும் அப்பிடிங்கிற கருத்து..

> அந்த காதல ஜோடி.. அவர்களின் நெருக்கத்தை ரிங்க்டோன் மூலமாக சொல்லியது..

> எல்லா இளைய முதிய தலைவர் தளபதி என்ன எல்லா ஸ்டார்களையும் ஓட்டியது (அன்புவின் அறிமுகம்)

> இசை.. பாடல்கள்.

> நடித்த எல்லா பசங்க...

> முக்கியமாக எந்த கவலையும் இல்லாமல் தன் பாட்டுக்கு சேட்டைகளை செய்யும் புஜ்ஜிமா...

> டைரக்டர் சார்.. நம்ம புஜ்ஜிமாவ வச்சு எப்பிடி படம் எடுத்திங்க.? அப்பிடின்னு கேக்க வச்சவர்..

இப்படி நிரே சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆஅனால் மீண்டும் ஆணிகள் மேசைமேல் கொட்டி கிடக்கின்ற படியால், இத்துடன் விடை பெறுகிறேன்...

கொஞ்சம் வோட் பண்ணுங்க பாஸ்... ப்ளீஸ்..

3 comments:

  1. அந்த காதலை வெளிப்படுத்தும் விதம் கூட சூப்பர் இல்ல ? உண்மையிலேயே ரெண்டு மூனு முறை பார்க்கவேண்டிய படம்.

    ரிங் டோன் விஷயம் நீங்க சொல்லித்தான் தெரியும். மறுபடி பார்க்கும்போது ரசிக்கிறேன்...

    ReplyDelete
  2. அருமையான எழுத்து நடை!
    தெடர்ந்து படிக்கிறேன்...
    நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. //ரிங் டோன் விஷயம் நீங்க சொல்லித்தான் தெரியும். மறுபடி பார்க்கும்போது ரசிக்கிறேன்... //

    பழைய இளையராஜா பட பாடல்களை இயக்குனர் அருமையாய் உபயோகப் படுத்தி உள்ளார்..

    நன்றி செந்தழல் ரவி அண்ணே...



    //அருமையான எழுத்து நடை!
    தெடர்ந்து படிக்கிறேன்...
    நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!! //


    ((((> சின்ன சின்ன விசயங்கள கூட பாராட்ட அது பெரிய சாதனைகளை செய்ய தூண்டும் அப்பிடிங்கிற கருத்து..)))

    ReplyDelete