எனக்கு வேலை சுத்துறது ...
இந்தியாவுல கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுக்கும் போயாச்சு.. வடகிழக்கு மாநிலத்துக்கு தான் இன்னும் எனக்கு சான்ஸ் கிடைக்கல...
எல்லா ஊர்களுக்கும் போறப்போ ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும்... பஸ், ரயில், பிளேன் என மாறி மாறி போனாலும் ரொம்ப பிடித்தது ரயில் பயணம் தான்... சுகமான தாலாட்டு.. காலாற நடை.. அவசரத்துக்கு போறதுக்கு பிரச்னை இல்ல..
அதைப்போல ஒரு பயணம் தான் சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைச்சுது..
சென்னைல இருந்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு கிளம்பி மறுநாள் காலைல ஒன்பது மணிக்கு கொண்டு போய் சேர்ப்பான்..
ஆனா அந்த எழு மணியில இருந்து ஒன்ம்பது மணிவரைக்கும் கேரளா கரை ஓரமா வண்டி போகும் பாருங்க.. சுகம்...
தென்னை மரம்..
அப்பப்போ கடக்குற ஆறுகள்..
ஆற்றோரமா இருக்கிற வீடுகள்..
அவங்களுக்குன்னு இருக்குற கட்டுமரம்...
சில்லுன்னு காத்து...
ரொம்ப இடம் வளைச்சு கட்டி இருக்கிற வீடுகள்..
கேரளா பெண்குட்டிகள்...
எல்லாமே அழகா இருக்கும்..
அதெல்லாம் தாண்டி...
மங்களூர்...
கேரளா கர்நாடக எல்லைல இருக்கிற முக்கியமான கர்நாடக நகரம்..
இங்கே காற்றும் இருக்கும் வெயிலும் இருக்கும்... மலைமேல் இருக்கிற நகரம்.. மீன்பிடி துறைமுகம் இருக்கு... மலையும் கடலும் இணையும் இடம்.. கிட்டத்தட்ட சென்னை மாதிரி வெயில் சுடும்.. அப்பப்போ மழையும் பெய்யும்..
இங்கே சிறப்பு ..
நிறைய நல்ல நல்ல இடங்கள் இந்த நகரத்தை சுற்றி உள்ளன..
கொல்லூர்..
குதிரமுக்...
உடுப்பி..
மல்பே..
இன்னும் நிறைய இடங்கள்... எனக்கு தெரிஞ்சத சொல்றேன் அவ்வளவு தான்.. அப்பறம் இங்கே இருந்து கோவா போறதுக்கு ரயில் பயணம் மிக மிக அருமையானது... கொண்கன் ரயில்வேஸ் இயக்குகிறது.. இது ஒரு அழகான ரயில் பாதை ஆகும்..
மங்களூர்இல் இருக்கும் பெண்கள் இயற்கையாகவே அழகாக இருப்பார்கள்.. இங்கே என்ன இருக்குன்னு தெரியல நாம் பார்க்கும் என்பது சதவிகித பெண்கள் அழகாகவே இருக்கிறார்கள்.. இங்கே இருந்து சென்ற சில பிரபலங்கள்..
சில்பா ஷெட்டி
ஐஸ்வர்யா ராய்..
தீபிகா படுகோனே..
குட்டி ராதிகா..
ஸ்னேஹா உள்ளல்..
இந்த லிஸ்ட் இன்னும் நீளும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்...
இது போதாதா எனக்கு பிடிச்ச நகரங்களில் மங்களூர் இடம் பெற??
நல்ல இடம்தான்...
ReplyDeleteஅண்ணாமலையான் Sir..
ReplyDeleteThanks for Coming and keep coming...
anga pogava vendam neengal sonnathe angu pona nyabaghathai thanthathu nanri
ReplyDelete