Friday, July 2, 2010

ஒரு மழைப் பொழுதும் மலையாள பெண்ணும்..



லைலா.. எனக்கு பிடித்த நடிகையின் பெயர் ஆனதாலோ என்னவோ அந்தப் பெயரை கொண்ட புயல் நேரத்தில் சிக்கிக்கொண்டேன்..


படம் நன்றி : விகடன்

பயணங்கள்..

வாழ்க்கை ஒரு பயணம் என்பது எல்லாரும் சொல்வது.. நான் பார்க்கும் வேலையோ பயணம் வாழ்க்கை ஆவது.. எத்தனை மனிதர்கள்.. எத்தனை முகங்கள்.. எத்தனை மொழிகள்...

விஜயவாடா.. எனக்காக லைலா வந்த இடம்.. லைலா வந்ததால் என்னுடைய பிளான் எல்லாம் மாற்றிக்கொண்டு சென்னை புறப்பட மதியம் தேடிய வேளை கிடைத்த ஒரே ரயில்.. ஹவுரா மெயில் .. மழையால் பயணிக்கும் திசையை மாற்றினார்கள்.. அங்கே ஆரம்பித்தது... சுத்திகிட்டு போகும் என்று சொன்னார்களே தவிர எதை சுத்திகிட்டு போகும் என்று சொல்லவே இல்லை..

ஒவ்வரு சிறிய ஸ்டேஷன் வந்தாலும் இரண்டு மணிநேரம் அங்கேயே ஹால்ட் அடித்து,, ரயில் போக்குவரத்தை இயக்கிக் கொண்டு இருந்தார்கள்.. பாவம்.... சிங்கள் ட்ராக் வழி.. அவர்களும் என்ன பண்ணுவார்கள்..

ஆக ஏழு மணிநேர பயணம் ஆனது முப்பத்தி ஓரு மணிநேரமாக..

இந்த மாதிரி ரயில் பயணங்கள் உங்களுக்கு கற்றுத்தருவது ஒன்றே ஒன்று.. எது வந்தாலும் ஏற்றுக்கொள்.. அனுபவி.. இதுதான்..

இந்த பயணங்களில் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.. அதுவும் எதிரே ஒரு பெண் என்றால் ? நல்லா சுவாரஸ்யமா தான் இருக்கும்..

அவர் ஒரு மருத்துவர்.. மருத்துவ மேல் படிப்புக்காக திப்ருகர் சென்று திரும்பிக்கொண்டு இருந்தனர் அவர்களும் அவர் அப்பாவும்.. எனக்கு மருத்துவத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருந்ததனாலும் பல சந்தேகங்கள் இருந்ததனாலும் நிறைய பேசினோம்...

எனக்கு பிடித்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவர்கள் ஊரைப் பற்றி பேசிக்கொண்டும் வந்தேன்.. எப்போதுமே கேரளா என்றல் தனி அழகு தான்.. என்னை கவர்ந்த ஒரு இடம்.. அவர் ஓர் பற்றி.. அவர் வீட்டைப்பற்றி.. அவர் ரோஜா செடியை பற்றி.. நிறைய பேசினோம்...

எனக்கு தெரிந்த அக்கு பிரஷர் முறைகளை பற்றி பேசினோம்.. அவர் எடுக்கவுள்ள காத்து மூக்கு தொண்டை சர்ஜன் படிப்பே தேவை இல்லை என்று இந்த மருத்துவத்தில் சொல்லி உள்ளதை சொன்னேன்... நிறைய ஆச்சரியம்.. ஆனாலும் விட்டுக் கொடுக்கவில்லை.. அந்த மருத்துவமுறை மற்றும் அது தொடர்பான ஒரு புத்தகத்தையும் அவருக்கு பரிசாக கொடுத்தேன்.. அதில் என் மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்தேன்..

இடையே என்னுடைய திருமண விசயத்தை பற்றி சொல்லி இருந்தேன்... மறக்காமல் அழைப்பு ஈ மெயில் அனுப்ப சொல்லி இருந்தார்கள்...... நானும் பயணத்தின் பிறகு மறக்காமல் மறந்துவிட்டேன்... ஆனாலும் திருமணத்திற்கு ஒரு வாரம் கழித்து போன் செய்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.....

இந்த பயணம் சுவாரஸ்யமாகவும் சந்தோசமாகவும் ஒரு புதிய நட்பை அறிமுகப் படுத்திய திருப்தியாகவும் இருந்தது...

No comments:

Post a Comment