Sunday, July 4, 2010

இது ஒரு கண்டக்டர் இன் கதை... மனதை உருக்கும் விடுகதை...

ஒரு கண்டக்டர் மிக திமிர் பிடித்தவர்... பயணிகளை மதிக்காமல் இருப்பான்... சில நேரங்களில் நிறுத்தக்கூடிய ஸ்டாப் களில் நிறுத்தாமல் செல்ல விசில் கொடுப்பவன்.. ஒரு மோசமான கண்டக்டருக்கு மிகச் சிறந்த உதாரணம்...

அந்த விதியின் வசம் இருந்த நாளில்.. கோகிலா பதினெட்டு வயது முடிந்து இரண்டு மாதம் ஆனா நிலையில் கல்லூரி செல்ல வரும் போது இந்த கண்டக்டர் இருக்கும் பஸ்ஸை நிறுத்தாமல் போக.. எப்படியும் ஏறிடலாம் என கோகிலா நினைக்க.. தவறி விழுந்ததில் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு செத்துப் போனாள்..

கண்டக்டரை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போனாங்க.. அங்க இருந்து கோர்ட்...
ஜட்ஜ் தீர விசாரிச்சு இவனுக்கு மரண தண்டனை , ஆனா தூக்கு இல்ல .. எலெக்ட்ரிக் சேர் அப்படின்னு தீர்ப்பு எழுதிட்டார்..

ஒரு கேட்ட நாளில் அவர அந்த தண்டனை தரத்துக்காக அழைச்சிட்டு வந்தாங்க...

அந்த ரூமில அந்த சேர் அப்பறம் ஒரு ஓரத்தில் ஒரு மாங்காய் அவ்ளோ தான் High Voltage Current குடுத்தாங்க.. அப்படியும் ஒன்னும் ஆகல...

தப்பிச்சுட்டான் ... ஜட்ஜ் இவன ரிலீஸ் பண்ணிட்டார்...

திரும்பவும் வேலைக்கு வந்து சேர்ந்தான்.. அதே திமிர்.. அதே அலச்சியம்.. இப்போ தான் ஒரு மிக மிக மோசமான கண்டக்டர் என நிரூபித்தான்..

இப்போது ஒரு மத்திய வயதுடைய பெண்மணி.. ஸ்டாப்ல பஸ்ஸை நிறுத்த சொல்ல.. இந்த கண்டக்டர் விசில் தரல.. படியில் நின்று கொண்டு இருந்த பெண் இவன பார்த்து நல்லா இருப்பன்னு சொல்லிட்டே கீழ விழுந்து செத்துட்டாங்க..

திரும்பவும் கோர்ட் .. அதே ஜட்ஜ்.. இந்த தடவ இவன சும்மா விடக்கூடாது.. அப்படின்னு சாகுற வரைக்கும் எலெக்ட்ரிக் சேர் அப்படின்னு தண்டன தந்துட்டார்..

அந்த எலெக்ட்ரிக் சேர் இருக்குற ரூம்ல இப்போ மாதுளம் பழம் ஓரத்துல இருக்கு..

இந்த முறை அரை மணி நேரம் கரண்ட் குடுத்தும் அவனுக்கு ஒண்ணும் ஆகல..

மறுபடி விடுதலை பண்ணிட்டாங்க..

இப்போ நம்ம கண்டக்டர் திருந்திட்டான்.. அமைதியா அடக்கமா.. நேர்மையா ரொம்ப நல்ல கண்டக்டர் ஆயிட்டான்...

ஆனா இவன் விதி.. சொல்ல சொல்ல கேக்காம படியில Travel செஞ்ச ஒருத்தன் கீழ விழுந்து சாக, பழி நம்ம ஆள் மேல...

அதே கோர்ட்....
அதே ஜட்ஜ்..
இந்த முறை ஜட்ஜ் நல்லா கேள்வி பட்டு இருந்தார்.. இவன் மீது தப்பு இல்லை என்று.. ஆனால் செத்தது ஒரு ஆளும் கட்சி ஆளு.. தீர்ப்பு தர வேண்டிய கட்டாயம்.. இவனுக்கு தான் எலெக்ட்ரிக் சேர் ஒண்ணுமே ஆகுறதில்லையே.. அதனால...

அதே சேர்...
அதே எலெக்ட்ரிக் ...
ஆனா இந்த முறை ஓரத்துல எலுமிச்சம் பழம் இருந்தது...

இந்தமுறை அதிசயம்.. கரண்ட் பாஸ் பண்ண கொஞ்ச நேரத்துல செத்துட்டான்...

ஏன்???



யோசிங்க மக்களே...



இன்னும் தெரியல????
















கரண்ட் பாஸ் ஆகதப்போ அவர் ஒரு கெட்ட கண்டக்டர்.. means Bad Conductor...

CURRENT பாஸ் ஆனபோ அவர் ஒரு நல்லா கண்டக்டர்.. means good conductor....


no no no. no bad words.....

shared based on an email..

6 comments:

  1. ஏன்யா இந்தக் கொலைவெறி?

    ReplyDelete
  2. aaargh...... eppadi kooda chemistry class nadatha mudiyumo????

    ReplyDelete
  3. ராஸா நல்லாயிருங்கப்பு! :)

    ReplyDelete
  4. //ஏன்யா இந்தக் கொலைவெறி? //

    சும்மா தான் சார்..

    ReplyDelete
  5. //aaargh...... eppadi kooda chemistry class nadatha mudiyumo???? //

    நாங்கல்லாம் war field la wafer விக்கிறவைங்க..

    ReplyDelete
  6. //ராஸா நல்லாயிருங்கப்பு! :) //

    உங்க ஆசிர்வதம்ண்ணே...

    ReplyDelete