Tuesday, September 28, 2010

ஒரு சுகமான காதல்.. உண்மை சம்பவம்

ஹைதராபாத் .. சார்மினார் எக்ஸ்பிரஸ் .. அடுத்த ஸ்டேஷன் செகுந்தராபாத் வந்து சேர்ந்தது..

அப்போது ஒரு வயதான தாத்தா பாட்டி என்னுடைய கோச்சில் ஏறினர்..

தாத்தாவுக்கு வயது 73, பாட்டிக்கு 65..

(இவை பின்பு பாட்டியிடம் கேட்டுக்கொண்டு அறிந்தது)

பாட்டி மட்டும் ஊருக்கு கிளம்புகிறார் மகன் வீட்டுக்கு சென்னையில்..

தாத்தா வழியனுப்ப வந்தவர்..

அவங்களுக்கு உள்ளே என்ன ஒரு அன்பு தெரியுமா? இந்த வயசுலயும் தன்னோட பொண்டாட்டி பத்திரமா ஊருக்கு போயி சேரணும்னு ஒரு அன்பு தெரிஞ்சது இந்த பெரியவர் கிட்ட..

பக்கத்துல என்னோட சீட் அப்படின்னு தெரிஞ்சு எனக்கு அவரோட டிரைவர் நம்பர் குடுத்தார்.. அதுவும் எப்படி வண்டி கிளம்பிடுச்சு.. ஆனாலும் இந்த தள்ளாத வயசுலயும் டிரைன் ஜன்னல் கம்பி புடிச்சிகிட்டு சொல்லிட்டே வந்தார்...

எனக்கு உடனே என்னோட பொண்டாட்டி ஞாபகம்..

காதல் என்றும் இருக்கும்..

1 comment:

  1. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

    ReplyDelete