Friday, June 26, 2009

சமிபத்தில் கேட்ட பிடித்த பாடல்.. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து..

சமீபத்தில் பாதித்த இரண்டு பாடல்கள்..

பெம்மானே .. ஆயிரத்தில் ஒருவன் படப்பாடல்.. கேட்டவுடன் என்னை பாதித்தது...

இந்தப் பாடலை கேட்டவுடன் எனக்கு என்னவோ சோழர் காலம் ஞாபகம் வருகின்றதோ இல்லையோ இப்போதிருக்கும் ஈழர் காலம் ஞாபகம் வருகின்றது..

வைரமுத்து எவ்வளவு பேர் வந்தாலும் அவர் முத்தரை இன்னும் அவரிடமே..

வார்த்தைகளை வார்த்து இருக்கிறார்..
சோகத்தை சுரந்து இருக்கிறார்..

பாம்பே ஜெயஸ்ரீ .. உருகி இருக்கிறார்...

என்னை பாதித்த சில வரிகள்...

புலம் பெயர்ந்தோம்..
பொலிவு இழந்தோம் ..
புலன் கழிந்தோம்..
அழுதழுது உயிர் கிழிந்தோம்..
அருள்கோனே...

மூப்பானோம்..
முன் மெலிந்து முடமானோம்...
மூச்சு விடும் பிணமானோம்...
முக்கடோனே...


வாழ்ந்தாலும்
சங்கதிர வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல்
சாகமாட்டோம்...

இன்னொரு பாடல்.. இதே படத்தில் வரும் "தாய் தின்ற மண்ணே "

அய்யா பி பி ஸ்ரீநிவாஸ்...
வணங்குகிறேன் அய்யா...
தமிழ் உச்சரிப்பின் உச்சம் நீங்கள்..
வலியை பாடலில் வெளிப்படுத்தி ..
அவமானத்தை அடிமனது வரை கொண்டு சென்று இருக்கின்றீர்கள்...

இதே பாடலை விஜய் ஜேசுதாஸ் இன்னொரு version பாடி இருக்கிறார்.. அதுவும் அருமை.. அது இரண்டு பத்திகளை இருக்கின்றது..

வைரமுத்து அவர்களே...
அருமை.. அருமை..
என்ன சொல்வது.. என் தாய் நாட்டை யாரவது ஆண்டு நான் அதன் மன்னனானால் என்னுடைய மனநிலை இந்த பாட்டை போல தான் இருக்கும்....

அரித்தெடுக்கும் அவமானம்..
இதயத்தை இடிக்கும் இயலாமை ..
வரிகளில் உருக்கி வார்த்து இருக்கிறார்....

எனக்கு பிடித்து இருக்கும் சில வரிகள்.. இந்தப் பாடலில் இருந்து...

கயல் விளையாடும்
வயல் வெளி தேடி..
காய்ந்து கழிந்தன கண்கள்..

சிலை வடிமேவும்
உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்..

புலிக்கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொரிப்பதுவோ??

தங்கமே என்னை
தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே
புரள்வோம்..

இன்னும் எவ்வளவோ சொல்லலாம் ... சொல்லிக்கொண்டே இருக்கலாம்..

இந்த இரண்டு பாடல்களையும் திரும்ப திரும்ப கேட்க வைப்பது என்ன உணர்வு என நான் தேடிக் கொண்டு இருந்தபோது ஒன்று தோன்றியது...

இப்போதிருக்கும் ஈழத் தமிழர் நிலைமையும் இந்த பாடல்களோடு கொஞ்சம் அல்ல மிகவே பொருந்திப் போகிறது...

கேட்டு பார்த்துட்டு கருத்தை சொல்லுங்க..

8 comments:

  1. நானும் இந்த பாடல்களை கேட்டேன்.அனைத்து பாடல்களும் நன்றாய் இருந்தது

    ReplyDelete
  2. இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றது அண்ணா..

    ReplyDelete
  3. பாடல்கள் அருமை, ஆனால் காட்சியமைப்பும் அழகாக இருந்தால்..
    இந்த வருட சூப்பர் ஹிட் பட்ம் இதுதான்!!

    ReplyDelete
  4. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  5. தாய்தின்ற மண்ணே பாடலின் இரண்டு வடிவங்களையும் விஜய் ஜேசுதாஸ்தான் பாடியிருக்கிறார். பெம்மானேயில் வரும் இறுதி வரிகளைத்தான் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார். பாடல் வரிகளையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும். இந்த இரண்டு பாடல்கள் குறித்தும் நான் போட்ட பதிவு
    http://nettrayakaattru.blogspot.com/2009/06/blog-post_18.html

    ReplyDelete
  6. Thank you kalaiarasan and krishna,.,..
    Thank you for visiting
    //தாய்தின்ற மண்ணே பாடலின் இரண்டு வடிவங்களையும் விஜய் ஜேசுதாஸ்தான் பாடியிருக்கிறார். //

    One version Chola ecstacy sung by Dr PBS..
    thank you for visiting..

    ReplyDelete
  7. Wynn casino reopening buffet: prices, hours, menu changes
    "Our 대구광역 출장샵 new buffet, Wynn Palace, is the 서울특별 출장샵 perfect spot for all types 김포 출장마사지 of events and 정읍 출장샵 entertainment," said Steve Wynn, president and CEO. 서산 출장마사지 "We've been

    ReplyDelete