Tuesday, June 30, 2009

மஞ்சள் வண்டி கொள்ளைக்காரர்கள்...

சென்னை...

பல வித்தியாசமான மனிதர்களையும் இடங்களையும் கொண்டுள்ளது..

கோவில்கள், மசூதிகள், சர்ச்கள் என புகழ் பெற்ற பல தலங்கள் இருந்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், திருட்டு, பித்தலாட்டம், கள்ளக்காதல் என அநியாயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது..

இதில் கொள்ளை மற்றும் திருட்டு பல வகையில் செய்கின்றனர்.. வாகன திருட்டு, A/C மெஷின் கழட்டி திருட்டு, கருப்பு பணம் மட்டும் கொள்ளை, என பல வகையில் செய்கிறார்கள்.. ஆனால் நம்மை சுற்றியே ஒரு கொள்ளைக்கும்பல் மஞ்சள் வண்டியில் வலம் வருவது எத்தனை பேருக்கு தெரியும்...

தெரியாது என இப்போது நினைப்பவர்களுக்கும் தெரியும்... ஆம்..

சென்னைவாசிகள் சில விசயங்களை பிடிக்காது என்றாலும் அதை தான் அவர்கள் நம்பி செய்ய வேண்டும் என சில தலை எழுத்து உண்டு..

அதில் மிக மிக முக்கியமானது..

ஆட்டோ ரிக்ஸா...

இவர்களால் சென்னை படும் பாடு கொஞ்சநஞ்சம் அல்ல... எனக்கு நேர்ந்த நான் பார்த்த சிலவற்றை நான் இங்கு பகிர்கிறேன்..

> எங்கள் வீடு சூளைமேடில் உள்ளது.. ஒரு முறை ஊருக்கு செல்ல நான் ஒரு ஆட்டோவை வாடகைக்கு பிடித்தேன்... நான் செல்ல வேண்டிய இடம் எழும்பூர்.. ஏறி அமரும் போது கவனித்தேன் அந்த மீட்டர் digital என்றும் ஏற்கனவே ஓடிக்கொண்டு இருந்தது என்றும்...
வாடகை பேசியது எண்பது ரூபாய்.. அதுவும் நூறு ரூபாய் சொல்லி பேரம் பேசி குறைத்தது... எனவே எனக்கு மீட்டர் எவ்வளவு தான் ஆகிறது என பார்க்க இயற்கையாகவே ஒரு உந்தல் இருந்தது... நான் குறித்துக்கொண்டேன் ..
எழும்பூர் சென்று இறங்கும் போது இருந்த மீட்டர் அளவு.. அதை கழித்துப்பார்த்தால் வருவது எவ்வளவு ரூபாயாகும் என நினைக்கிறீர்கள்..??


ரூபாய் 28/-

ஒரு சிறிய கணக்கு...

Fare Asked = Rs 80
Actual Meter Reading = Rs 28

Fare asked = 2.87 times of actual meter reading...

ஆனால் அந்த ஆடோகார நாய் சொன்னது.. அதுல இருவது ரூபா வரும் பத்து ரூபா கூட வரும்.. பேசுனது பேசுனது தான் சார்.. எடுங்க எண்பது ரூபாய.. என்றான் அந்த தே........ பையன்..


அதாவது நாம் பேரம் பேசியே கிட்டத்தட்ட மூன்று மடங்கு ஏமாறுகின்றோம்..
மேலே சொன்ன கொள்ளை திருட்டு வழிகள் உங்கள் கண்முன்னால் நடப்பவை அல்ல.. ஆனால் இந்த திருட்டு? உங்கள் கண் முன்னால் நடக்கிறது.. அன்றில் இருந்து மிக அவசியம், அவசரம் என்றாலே நான் ஆட்டோவை உபயோகிக்கிறேன்..

இப்போது மாநகர பேருந்து நிறைய நல்ல நல்ல பேருந்துகள் விட்டு இருக்கிறார்கள்.. A/c பஸ் கூட உண்டு.. ஆட்டோ உபயோகிக்கும் எண்ணம் இருந்தால் சிறிது முன்னமே கிளம்பி bus stop செல்வதை இப்போது வழக்கமாக கொண்டுள்ளேன்.. ஒரு நடை போன மாதிரியும் ஆச்சு.. (வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளை ஆச்சு ) இல்லை என்றால் share auto பயன் படுத்துகிறேன்.. இல்லை என்றால் மின்சார ரயில்..
நாம் ஏமாறாமல் இருப்பது நம் கையில் தான் இருக்கு..??
ரொம்ப தேவை என்றால் மட்டுமே நான் ஆட்டோவை நாடுவது உண்டு..

நான் இதையே நீங்களும் செய்யுங்கள் என சொல்லவில்லை..

>பஸ் பிடிக்க கொஞ்ச தூரம் நடந்தால் உடம்புக்கும் நல்லது.. பணமும் மிச்சமாகும் ..

>இல்லை என்றால் எதாவது ஒரு நல்ல ஆட்டோ டிரைவர்ஐ பழக்கபடுத்திக் கொள்ளலாம்..

>சின்ன சின்ன தூரங்களுக்கு சைக்கிள் உபயோகப் படுத்தலாம்.. உடலுக்கும் ஆரோக்யம்.. சுற்றுப் புற சூழலுக்கும் நல்லது..

சரி இந்த விசயங்களுக்கு எல்லாம் முடிவே இல்லையா? பெங்களூர் ஹைதராபாத் மாதிரியான ஊர்களில் உள்ள மாதிரியான மீட்டர் சிஸ்டம் கொண்டு வர முடியாதா? முடியாதென்றால் ஏன்?

எனக்கு தெரிஞ்ச கேள்விப்பட்ட உண்மைகள்..
நிறைய ஆட்டோ இங்கே வாடகைக்கு ஓடுகின்றது.. ஆட்டோவுக்கு சொந்தக்காரகள் ஒன்று கீழ்மட்ட அரசியல்வா(வியா)தியாக உள்ளனர்.. இல்லை போலீஸ்காரர்களாக உள்ளனர்.. சோ (இது s o சோ ) இவர்கள் பிழைப்பில் மண் விழக்கூடும் மீட்டர் சிஸ்டம் வருவதை விரும்பவும் மாட்டார்கள்.. இதனால் இந்த ஆட்டோ உரிமையாளர்கள் பிழைக்க நாம் நித்தம் ஏமாற என்ன எங்களுக்கு தலை எழுத்தா ?

சிந்திக்க தகுந்தவை தான் இவை என நினைக்கிறேன்.. பிடித்திருந்தால் வாக்குகளை குத்து குத்துவென குத்துங்கள்..



(ஒரு வேளை வீட்டுக்கு ஆட்டோ வருமோ?)

7 comments:

  1. இந்த விஷயத்துல மனவாடுகள் ரொம்ப நல்லவர்கள். இன்னமும் மீட்டர் அங்கு புழக்கத்தில் இருக்கு. அப்படியே ,
    மஞ்சள் துண்டு கொள்ளைகாரர்களை பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா சொன்னீங்க. Hydrbad, Bangalore ல எல்லாம் தைரியமா ஆட்டோ பிடிக்கலாம். தமிழ்நாட்ல மட்டும் ஏன் இப்படி.

    ReplyDelete
  3. NEENGA YEN AUTO EDUKKURINGA. NADANDE POGA VENDIYATHUDANE.CHENNAI YILA MATTUM ILLAI YEN THAJAI YILUM THAN.

    ReplyDelete
  4. நல்ல இடுகை...மஞ்சள் வண்டி என்று உள்ளே வந்து பார்த்தல் தான் தெரியுது நீங்க ஆட்டோவை சொல்லி இருக்கீங்க என்று...

    ReplyDelete
  5. //மஞ்சள் துண்டு கொள்ளைகாரர்களை பற்றியும் எழுதுங்கள். //

    தல... ஆட்டோவ பத்தி எழுதுனா வீட்டுக்கே ஆட்டோ அனுப்புறமாதிரி பண்ணுவிங்க போல??

    //.CHENNAI YILA MATTUM ILLAI YEN THAJAI YILUM THAN. //
    அப்படியா?? மேலும் மதுரை கோவை இங்க கூட அப்படி தான்...

    தமிழன பார்த்தா மட்டும் தான் இளிச்ச வாயனா? எல்லாரும் இப்படி ஏமாத்துராங்கெ..

    வந்தமைக்கு நன்றி..


    அஹோரி...
    ரமேஷ்..
    hotv..
    இங்கிலீஷ்காரன்..

    ReplyDelete
  6. ya absolutely rite..
    i gave 250rs from thousand lights-koyembedu (for single person only)

    romba aniyayam...
    kollikaasu kuduka vendiyadha iruku..

    ReplyDelete
  7. ஒவ்வொரு முறையும் வெளியூர் சென்று திரும்பி வரும் போது, நான் ரொம்பவே யோசிக்க கூடிய, வருத்தி கொண்ட விஷயம் இந்த ஆட்டோகாரர்கள் தான். அதுவும், கத்திபாரா சந்திப்பின் ஆட்டோகார்கள் மிக மோசம்.

    மும்பையில் கூட மீட்டர் இருக்கிறது. இங்கே எப்போது அந்த விடிவு காலம்?

    தெரிந்தே ஒரு கொள்ளை கூட்டத்திடம் ஏமாந்து கொண்டே இருக்க வேண்டியது தானா?

    ReplyDelete