Thursday, July 2, 2009

சார் போஸ்ட்..

"என்னடி என்ன சமையல் இன்னைக்கு?" கேட்டுக்கொண்டே வந்தார் கோபால்சாமி..

"ஆமா உங்களுக்கு நாக்குக்கு வக்கனயா சமைச்சு சமைச்சு போடுறேன்.. அங்க மதராஸ்ல என்னோட புள்ள என்ன சாப்பிடரானோ? என்ன செஞ்சானோ..?" விசாலாக்ஷி நொந்துகொண்டே தட்டை வைத்தாள்...

"பார்த்து டீ இது உங்க அப்பன் வீட்டு தட்டு இல்ல... நான் வாங்குனது.." சிரித்தார் கோபால்சாமி..

"ஆமாமா பெரிய வெள்ளி தட்டு.. வந்துட்டாரு .. புள்ள இப்போ.." என விசாலாக்ஷி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே

"நிறுத்துறியா? புள்ள புள்ள அப்பிடின்னு புள்ள புராணத்த.." இது கோபால்சாமி..

"உங்களுக்கு என்ன தெரியும்.. தாய் பாசத்த பத்தி...? " முறைத்தாள்.

"எனக்கு மட்டும் பாசம் இல்லையா? அந்த காலம் மாதிரியா? இந்த இருபதாம் நூற்றாண்டுல ஒரே ஊருல வேலை கிடைக்குதா? என்ன பண்ண அவன் படிச்சா டிகிரி படிப்புக்கு இங்க யாரு வேலை தருவா? சரி கடுதாசி எதுவும் வந்துருக்கா? " விசாரித்தார்..

"இனிமே தான் தபால் காரர் வரணும்ங்க.. " சொல்லிக்கொண்டு இருந்தவள் வாசலில் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். .

"சார் போஸ்ட்.." தபால்காரர் போட்டு விட்டு போன கடிதத்தை எடுக்க சின்ன பிள்ளையாய் ஓடினாள்..

"பாருங்க என்னோட புள்ள தான் எழுதிருக்கான்.. அவனுக்கு ஆயுசு நூறு.." சிரித்தபடி அவரிடம் நீட்டினாள்.. "படிங்க"

"படிக்கிறேன் குடு" வாங்கினார்..

அன்புள்ள அம்மா அப்பாவுக்கு...

தங்கள் மகன் பிரியத்துடன் எழுதிக்கொள்வது.. இங்கு நான் நலம். நீங்கள் நலமுடன் இருப்பிர்கள் என நம்புகிறேன்..
இங்கு எனக்கு வேலை பிடித்துள்ளது.. பெரிய அலுவலகமாக உள்ளது.. அடுத்த மாதம் இங்கே எனக்கு பணி நிமித்தமாக Training உள்ளது.. எங்களுடைய அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி தரப்போகிறார்கள்..
அம்மா நீங்கள் குடுத்தனுப்பிய முறுக்கு என்னுடைய நண்பர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.. ஒரே நாளில் தீர்ந்துவிட்டது.. நீங்கள் டாக்டரை போய் பார்த்திர்களா? அடுத்தமாதம் நூறு ரூபாய் சேர்த்து அனுப்புகிறேன்.. மருத்துவ செலவுக்கு வைத்துக் கொள்ளவும்.. மற்றபடி இங்கே எல்லாம் நலமாக உள்ளது..

இப்படிக்கு

தங்கள் அன்பு மகன்,

சேகர்..
12/07/93

படித்து முடித்தார் கோபால்சாமி..

"அடுத்த தடவ முறுக்கு கொஞ்சம் ஜாஸ்தி குடுத்துவிடனும்.. புள்ளைக்கு சாப்பிட கிடைக்கலயாமே.." முனுமுனுத்தாள் ..

"அசடு அசடு.. என்னவோ போ.." கோபால்சாமி சிரித்துக்கொண்டார்..

>>>அடுத்த ஆறாவது நாள்..

"என்னம்மா விசாலாக்ஷி என்ன பண்ணிட்டு இருக்கே?" கேட்டுக்கொண்டே நுழைந்தார் அவர் அண்ணன் ஸ்ரீனிவாசன்..
"வாங்கண்ணா.. நல்ல இருக்கிங்களா ? அண்ணி வரலியா?" கேட்டாள்.
"எல்லாரும் நல்ல சௌக்கியம் .. அவ வீட்டுல இருக்கா.. நான் வக்கீல பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாமேன்னு வந்தேன்.." சொன்னார்.. "என்ன சேகர் கடுதாசி எதுவும் போட்டு இருக்கிறானா? "
கேட்டார்..
"ஆமா அண்ணா.. இந்தாங்க படிங்க.." நீட்டினாள்..

"என்னம்மா வந்து ஆறுநாள் தான் ஆறது போல? ஒரு வருஷம் ஆனா மாதிரி பழசாயிடுச்சு? இதே தான் நித்தமும் படிச்சுட்டே இருக்கியா? " சிரித்த முகத்துடன் கேட்டார்..

"என்ன பண்ண அண்ணா.. புள்ளைய வேற ஊருக்கு அனுப்புனாலே இப்படி தான் பண்ண வேண்டி இருக்கு.. என்ன பண்ண.." சொன்னாள் பெருமூச்சுடன்..

>>>>>> பதினான்கு வருடங்கள் கழித்து..

"டேய் சேகர்.. லீவுக்கு சுமதியையும் பேரனையும் இங்க ஊருக்கு அனுப்பு டா.. பார்க்கணும்போல இருக்கு.." கோபால்சாமி செல் போனில் பேசிக்கொண்டு இருந்தார்..

"சரிப்பா.. பார்க்கலாம்.." சேகர் மறுமுனையில் இருந்து..

>> அதன் பதினைந்தாவது நாள்..

"தாத்தா.. " கத்திக்கொண்டே ஓடி வந்து கட்டிக்கொண்டான் பத்து வயது பேரன் கிஷோர்..
"வாடா வாடா.. கன்னுகுட்டி.. இப்போதான் தாத்தாவ பார்க்கணும்னு ஞாபகம் வந்ததா?" உச்சி முகர்ந்துட்டே சொன்னார் கோபால்சாமி..
"வணக்கம் மாமா.. "பின்னால் வந்தால் சுமதி...
சில பல விசாரிப்புகளுக்கு பின்னர் இரவு...

தாத்தா பக்கத்தில் பேரன் படுத்து இருந்தான்.. சற்று முன் தான் அவன் அப்பாவுடன் பேசி இருந்தார்கள்..

"தாத்தா.. எனக்கு ஒரு டவுட் .."

"சொல்லுடா தங்கம்.."

"இப்போ எல்லாம் செல் போன் இருக்குல்ல? முன்னாடி இதை கண்டு பிடிக்காதப்போ என்ன பண்ணிங்க?"

"ஹா ஹா,.. அப்போ எல்லாம் லெட்டர் தான் செல்லம்.."

"லெட்டர்ஆ? அதுல எல்லாம் எழுதிடுவாங்களா? SMS மாதிரி இருக்கும் இல்ல தாத்தா? "

"ஆமா ப்பா.. அது கொஞ்சம் பெரிய sms.."

"ஒரு லெட்டர் வர ரொம்ப நாள் ஆகுமே தாத்தா.. "

"ஆமா டா கண்ணு .. "

"அப்ப அதுல பேசிக்க முடியாதே.. ரொம்ப கஷ்டமா இருக்கும்ல?"

"கஷ்டம் தான் .. ஆனா அது எல்லாம் கொஞ்சம் சுகமா தான்டா இருக்கும்.."

"புரியல தாத்தா"

"சொல்றேன்...இப்போ எல்லாம் நினச்ச நேரத்துல பேசுறோம்.. அப்போ உங்கப்பா முதல் வேலைல சேர்ந்த சமயம்.. ஆனா அப்போ வாரதுதுக்கு ஒரு தடவ தான் கடுதாசி போடுவோம்.. வரும்.. அதுக்காக காத்துகிட்டு இருப்போம்.. வாரம் முழுக்க உங்கப்பாவ நினச்சுகிட்டு ஒரு நாள் மட்டும் வருகிற கடுதாசிய காத்திருந்து படிக்கிறது ஒரு சுகமப்பா.. இப்போ எல்லாம் நீ நெனச்ச ஒடனே உங்கப்பாகிட்ட பேசிடலாம்.. பேசிட்டு அப்போதைக்கு மறந்த்துருவே.. அதுக்காக உனக்கு அப்பா மேல பாசம் இல்லன்னு சொல்லல..அந்த நெனப்பு கொஞ்சம் கொறஞ்சுடும்.. அப்போ அப்படி இல்ல.. "

"தாத்தா நெனச்ச உடனே பேசுறது தான சந்தோசம்? நீங்க இப்படி சொல்றிங்க? எனக்கு புரியல..."

"சரி கண்ணு.. உங்கப்பாவ உனக்கு புடிக்குமா?"

"ஓ ரொம்ப .. உங்களுக்கே தெரியுமே தாத்தா... I miss him here"

"தெரியும் பா.. நான் சொல்றத நீ பண்ணுறியா?"

"சொல்லுங்க தாத்தா... "

"இன்னும் ஊருக்கு போறதுக்கு மூணு நாள் இருக்கு.. உங்கப்பாகிட்ட பேசவே பேசாத போன்ல.. உனக்கு அப்பா நினைப்பு தோணும் போதெல்லாம் ஒரு நோட் புக்ல என்ன பேச நினைக்கிறியோ எழுது.. இதை யாரு கிட்டயும் சொல்லாத.. என்ன? அப்போ உனக்கு புரியும்.."

"சரி தாத்தா செஞ்சு பாக்குறேன்.."

<<< அடுத்த மூணு நாள்.. கிஷோர் வாடிய முகம், அவன் சோகம் .. அவன் அப்பா என்ன ஆச்சு பேசவே இல்லை என்னும் விசாரிப்பு.. கிஷோர் உடன் ஒரு நோட் புக் எப்போதும்.. சுமதி மற்றும் கிஷோர் விடுமுறை முடித்து கிளம்புதல்..<<

"வீடே வெறிச்சோடி போச்சுங்க .. " விசாலாக்ஷி பேரனை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தாள்.. செல் சிணுங்கியது...

"இந்தாங்க உங்க மகன் பேசணுமாம் உங்ககிட்ட.. " புருசனிடம் கொடுத்தாள்..

"அப்பா தேங்க்ஸ் பா.." எதிர் முனையில் இருந்து சேகர் சொன்னான்..

"எதுக்கு டா?" கேட்டார் கோபால்சாமி..

"என்னோட மகன் என் மேல எவ்வளவு பாசம் வச்சு இருக்கிறான் என எனக்கு தெரிய வச்சதுக்கு...அவனோட ஒரு நோட் புக்கும் கொண்டாந்தான்.. அது தான்பா என்னோட வாழ்க்கையில கெடச்ச பெரிய பொக்கிஷம்.. எல்லாத்தையும் சொன்னான்.. நீங்க really great ப்பா.." சந்தோசத்தில் அவன் குரல் கொஞ்சம் உடைந்தது..

சிரித்துக்கொண்டார் கோபால்சாமி..

>>> அதன் ரெண்டு நாள் கழித்து..

"சார் போஸ்ட் " தபால்காரரின் குரல் வித்யாசமாய் ஒலித்தது அந்த வீட்டில்..

பிரித்தார் கோபால்சாமி..

தாத்தா...
நான் நல்லா இருக்கேன்.. நீங்க? பாட்டி ? நல்ல இருக்கிங்களா ??
நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் .. அப்பாகிட்ட போன உடனே நோட் புக்க குடுத்துட்டேன் அவருக்கும் ரொம்ப சந்தோசம் தாத்தா.. நீங்க சொன்னது இப்போ புரியுது தாத்தா..

bye bye
take care..
with luv
kishore..

கோபால்சாமி கடித்ததை மடித்து பத்திரமாக வைத்துக்கொண்டார்..

>> சில மணிநேரம் கழித்து..

தபால் பெட்டியில் பேரனுக்கு எழுதிய கடிதத்தை போட்டுவிட்டு அடுத்த வாரத்து பேரனின் கடிதத்தை எண்ணி காத்திருக்க தொடங்கினார் கோபால்சாமி....

13 comments:

 1. மென்மையா அழகா இருக்கு! உரையாடல் போட்டிக்கான நேரம் முடிந்து விட்டதே.. :(

  ReplyDelete
 2. //மென்மையா அழகா இருக்கு! உரையாடல் போட்டிக்கான நேரம் முடிந்து விட்டதே.. :( //

  Enna Koduma sir..

  Better luck next time..


  Enna sonnen...

  (vadivel stylil)

  ReplyDelete
 3. //remba nalla irukku...very nice //

  Thanks Sanmuga sundaram anne..

  ReplyDelete
 4. வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. நல்லா இருக்கு

  ReplyDelete
 6. மிக்க நன்றி. என் கண்ணில் நீர் வரவழைத்தற்கு!!

  ReplyDelete
 7. Thank you Nasareyan anne,,

  //நல்லா இருக்கு //

  Nandri sivakumar anne...

  //மிக்க நன்றி. என் கண்ணில் நீர் வரவழைத்தற்கு!! //

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நண்பரே என்னுடைய பதிவுகளுக்கு பாலோவராக தொடர்ந்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் அது மட்டுமல்லாமல் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் படிக்கிறோம் பாராட்டுகிறோம். அத்துடன் எங்களுடையதையும் படியுங்கள் பாராட்டுங்கள் தவறிருந்தால் திருத்திக் கொள்கிறோம் நன்றி

  ReplyDelete