Wednesday, July 15, 2009

ஒரு _________________ டைரியின் கடைசி பக்கங்கள்

சுற்றிலும் இரும்பு கம்பிகள்.. சிறை, கூண்டு, ,முகாம் என எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்...

வெளியே வெறித்த படி பார்த்துக்கொண்டு இருந்தேன்

என்னுடைய இனத்தவரை ஒவ்வருவராக கூட்டிச் செல்கின்றனர்.. இல்லை தூக்கிச் செல்கின்றனர்..

பெரிய சுவருக்கு மறைவில் அவர்களை கொண்டு சென்றவுடன் ஒரு சத்தம்..

மரண ஓலம் கேட்டதுண்டா நீங்கள்?

முதலில்
இருக்கும் சக்தியை எல்லாம் சேர்த்து சத்தம் வரும்.. பிறகு மரணம் நெருங்க நெருங்க அதன் சத்தம் குறைந்து சிறிது நேரத்தில் காணமல் போகும்..

மரணத்தை விட கொடுமை ஒன்று உண்டு தெரியுமா??

மரணத்தை எதிர் நோக்கியபடி உள்ளவர்கள் கேட்கும் மற்றவர்களின் மரண ஓலம் தான்..

நாளை நாம் சாகும் போது இப்படி தான் ஓலமிடுவோம் என்ற ஒரு எண்ணம் போதும் எல்லா எலும்புகளிலும் சில்லிடும் அந்த குளிர்ச்சி கொடுமையானது ..

இதோ என் கண் முன்னே வெட்டப்பட்ட என் இனத்தவர்... துண்டு துண்டாக வெட்டப்பட்டு ... சிறிதும் இறக்கம் இல்லாமல்.. சே..

எப்போதடா என் முறை வரும் என்று மரணத்தை நேசிக்க மட்டும் தான் முடிகிறது.. அந்த நேசிப்பு மரண பயத்தையும் வென்ற நேசிப்பு...


இதோ கூண்டு திறக்கப் படுகிறது.. என் முறை வருகிறது என்று நினைக்கிறேன்..

நண்பர்களே முடிந்தவரை என் மரண ஓலத்தை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.. மீறியும் கேட்டால் அது இயற்கையின் கோளாறு..

மீண்டும் சந்.....கோ ......

கோ.. கோக்கோ......

கோ.. கோ.. கோ...


.......இது ஒரு ப்ராய்லர் கோழி டைரியின் கடைசி பக்கங்கள்.....

10 comments:

  1. ப்ராய்லர் கோழி டைரியின் கடைசி பக்கங்கள்.....

    idhuthan mettara!!!!!!!!!!!!!

    iyyo iyyo valikudhu valikudhu valikudhu

    thanga mudiyala

    ReplyDelete
  2. நல்ல நடை+கற்பனை

    ReplyDelete
  3. டம்ப்ரீ.. யூத்ஃபுல் விகடன்ல லின்க் கொடுத்து இருக்காங்க..

    ReplyDelete
  4. Thanks to all...

    Karki special thanks for giving me the details. actually this is my first ever recoganisation for my work..

    ReplyDelete
  5. நன்றி அருணா,

    நன்றி கார்கி (கோர்க்கி)

    ReplyDelete
  6. கலக்குறீங்க... வாழ்த்துக்கள்.. :))

    ReplyDelete
  7. //கலக்குறீங்க... வாழ்த்துக்கள்.. :)) //

    தங்களின் ஆசி... நன்றி..

    ReplyDelete