Tuesday, July 21, 2009

பதிவுலகமும் அரசியலும்... ஒரு புது பதிவனின் புலம்பல்..

எல்லாருக்கும் வணக்கம் அண்ணே..

நான் கொஞ்சம் புது ஆளு.. சில நேரம் பதிவுலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியல.. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பதிவ படிச்சிட்டு இருந்த ஒண்ணுமே புரியல அதுக்கு சில மறைமுக பின்னூட்டம் சில பேர் போட்டு இருந்தாங்க..

சரி இந்த கதை நமக்கு தெரியாதுன்னு கெளம்பிட்டேன்...

அப்பறம் சில பல பதிவுகள் அப்படியே பார்க்க முடிந்தது..

இதுல ஒண்ணுமே புரியலண்ணே .. புது பதிவர்ன்றான் பிரபல பதிவர்ன்றான்.. புது பதிவர் போடுற பதிவுல பிரபல பதிவர்கள் பின்னூட்டம் போடலன்றான்..

செட்டு சேர்ந்து சுத்துறான்றான்... பொண்ணுங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடுறாங்கன்றான்.. தல சுத்துது சாமி..

இதுல எனக்கு சில விஷயம் புரியல..

எல்லா பிரபல பதிவர்களும் ஒரு காலத்தில் புது பதிவர்கள் தான்...

நல்லா எழுதுன யாரு வேணும்னாலும் பிரபல பதிவர் ஆகலாம்ல? அதே நேரத்துல பெருசுங்க எல்லாரும் கொஞ்சம் சிறுசுங்கள உற்சாகப் படுத்தலாம்ல?

அப்பறம் எதுக்கு இந்த சண்டை? ஆனப்பா சில பின்னூட்ட போர்களை படிக்கும் போது செம ஜாலியா இருக்கு.. ஆனா சில பேர் அதனால hurt ஆவுறாங்க.. அதையும் நாம நெனசுக்கணும்..

அதே மாதிரி அவங்க அவங்க பதிவுல அவங்க அவங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்.. அது கூகிள் ஆண்டவர் குடுத்த சுதந்திரம். நல்லா இருந்த பாராட்டுங்க.. நல்லா இல்லையா குறைய சுட்டி காட்டுங்க உங்க உண்மையான முகத்தோட..

அத விட்டுட்டு அனானி பின்னூட்டம் அசிங்கமா போடுறத தவிருங்க.. சரி நீங்க சுட்டிக் காட்டியும் ஒன்னும் பலனில்லையா.. விட்டுடுங்க என்னவோ எழுதிட்டு போறாங்க.. அந்த பக்கமே போகதிங்க..

அப்பறம் யாரும் என்ன தப்பா நினைக்க வேணாம்.. எதோ எழுதனும்னு தோணுனத எழுதிபுட்டேன் அவ்ளோதான்..

ஒவ்வொரு பதிவருக்கும் ஒவ்வொரு பீலிங் ...

4 comments:

  1. ப்ரீயா விடுங்க... எல்லாரும் படிப்பாங்க ஒரு நாள்.... நான் சொல்றேன்!!!

    ReplyDelete
  2. \\நல்லா இல்லையா குறைய சுட்டி காட்டுங்க உங்க உண்மையான முகத்தோட\\

    அந்த தைரியம் பல அனானிகளுக்கும் இல்லாததால்தான்
    பிரச்சினைகளே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அட, இதையெல்லாம் இத்தனை நாளாவா யோசிச்சிட்டிருந்தீங்க? இங்க இதெல்லாம் சகஜம்ப்பா.

    ReplyDelete
  4. Thank you for your visit Uncle Sen

    Thank you for your visit nikazhkalathil

    Thank you for your visit Subankan

    ReplyDelete